PUBLISHED ON : மார் 27, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 78; தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இனிய, எளிய நடையில் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் வெளிவருகிறது சிறுவர்மலர்.
தேசத்தலைவர்கள் வரலாறு, படக்கதை, மொக்க ஜோக்ஸ், சிறுகதைகள், குட்டி குட்டி மலர்கள் பகுதிகள் அருமை. சிறுவர், சிறுமியர் ஓவியத்திறனை ஊக்குவிக்கும் விதமாக, உங்கள் பக்கம் பகுதி வெளிவருகிறது. அறிவியல் கட்டுரைகள், நீதிக்கதைகள் மிகச் சிறப்பாக உள்ளன.
என் பணிக்காலத்தில் நீதிபோதனை மற்றும் நடிப்பு வகுப்புகளில், சிறுவர்மலர் இதழை அறிமுகப்படுத்த தவறியதில்லை.
மொத்தத்தில், ஆசிரியர்களின் துணைவனாக உள்ளது சிறுவர்மலர் என்றால் மிகையாகாது. ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
- சு.சேதுராமன், சிதம்பரம்.
தொடர்புக்கு: 94453 71341

