
என் வயது, 62; இல்லத்தரசியாக இருக்கிறேன்; சிறுவர்மலர் இதழை, 30 ஆண்டுகளாக தவறாமல் படித்து வருகிறேன். அக்காலத்தில், 'டிவி', அலைபேசி வசதிகள் இல்லை; அதனால், வாசிப்பு தான் பொழுதுபோக்காக இருந்தது.
என் மகனுக்கு உணவூட்டும் போது, சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை கூறுவேன். அதே இதழில், என் மகன் ஓவியம், 'உங்கள் பக்கம்!' பகுதியில் வந்ததைக் கண்டு, உள்ளம் பூரித்தேன்.
இப்போது வரும், சிறுவர்மலர், காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, என் பேரன், பேத்தியருக்கு சிறுவர்மலர் கதைகளை கூறி உணவூட்டுகிறேன். என் வயதுள்ளவர்களிடம், 'டிவி' மற்றும் அலைபேசியை தவிர்த்து, சிறுவர்மலர் இதழ் கதைகளை கூறி, உணவூட்ட அறிவுறுத்துகிறேன்.
அனைத்து தமிழர் இதயங்களிலும், தனி இடம் பிடித்துள்ளது சிறுவர்மலர். வாசகர்களை, தன் குழந்தை போல் பாவித்து, எழுத்தார்வத்தை ஊக்குவித்து, பரிசளிப்பதற்கு மிக்க நன்றி!
- எஸ்.சரஸ்வதி, மதுரை.
தொடர்புக்கு: 95432 05217

