
என் வயது, 66; கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறேன். நீண்ட காலமாக, சிறுவர்மலர் வாசித்துவருகிறேன். சனிக்கிழமை படிப்பதென்றால் கொள்ளை பிரியம். படிக்கும் போது சிறுவனாக மாறும் உணர்வு ஏற்படுகிறது. குடும்பத்தில் அனைவரும் போட்டி போட்டு படிக்கின்றனர்.
அறிவார்ந்த நீதி கதைகள், தேசத் தலைவர்களின் வரலாறு, மொக்க ஜோக்ஸ், மாணவ - மாணவியரின் ஓவியத்திறனை வளர்க்கும் போட்டி என, சிறுவர்மலர் முழுதும் மணக்கிறது; சுவையில் இனிக்கிறது!
பள்ளிக்கு புறப்படும் முன், சிறுவர்மலர் இதழைப் படிப்பது, என் பேரன்களின் வழக்கம். அதில் வரும் அறிவார்ந்த செய்திகள் பற்றி இரவில் கலந்துரையாடுவர்.
சிறுவர், சிறுமியரின் அறிவு, ஆற்றலை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. அனைத்து வயதினரும் விரும்புகின்றனர்.
எளிய நடையில் ஒவ்வொரு பக்கமும் அறுசுவையாக திகழ்கிறது. வண்ணங்களுடன் சிறுவர்களின் எண்ணங்களில் மலர்கிறது.
- ஆ.சந்திரசேகர், சென்னை.