PUBLISHED ON : ஏப் 16, 2022

அ நிறம் | அளவு
என் வயது, 58; தினமலர் நாளிதழை 20 ஆண்டுகளாக படிக்கிறேன். அதன் இணைப்பான சிறுவர்மலர் இதழை விரும்பி வாசிக்கிறேன்.
பேத்திக்கு, நான்கு வயதாகிறது. ஒருநாள், 'கதை சொல்லுங்க தாத்தா...' என்று விடாமல் நச்சரித்தாள். தெரிந்த கதை எல்லாம் கூறினேன்.
அவள் திருப்தி அடையவில்லை. செய்வதறியாது தவித்த போது, சிறுவர்மலர் நினைவு வந்தது. அதில் வந்த படக்கதையை காட்டி கதையை கூறினேன்.
அன்று முதல், சிறுவர்மலர் புத்தகத்தை கொடுத்து, கதை கேட்டு வருகிறாள். பல நாட்களாக, 'டிவி'யில் கார்டூன் படம் பார்த்தவள், அதை தவிர்த்து கதை கேட்கும் ஆர்வமுடன் இருக்கிறாள். தற்போது சென்னை சென்று விட்டாள். சனிக்கிழமையானால், சிறுவர்மலர் படித்து தொலைபேசியில் அவளுக்கு கதைகள் சொல்லி வருகிறேன்.
இது சிறுவர்மலர் மட்டும் அல்ல; பெரியவருக்கானதும் கூட!
- பி.சம்பத், மதுரை
