PUBLISHED ON : ஏப் 23, 2022

என் வயது, 65; சிறுவர்மலர் இதழை சுவாசிக்கும் வாசகி. பள்ளியில் படித்தபோது, வார, மாத இதழ்களை வாங்கி கொடுப்பார் என் அண்ணன். அவற்றில் மனம் கவர்ந்தது சிறுவர்மலர்; முழுமையாக படித்து முடித்தபின் தான், வேறு வேலை பார்ப்பேன்.
பள்ளியில் தோழியருடன் அமர்ந்து, நீதிக்கதைகள், கட்டுரைகளை வாசிப்பேன். புதிர்களை விடுவிப்போம். குழுவாய் வாசிக்கும் பழக்கம், பால்வாடி பணியாளராக பணியேற்ற பின்பும் தொடர்ந்தது.
அங்கன்வாடி மையத்தில், சிறுவர் தொடர்பு குழு, வளர் இளம் பெண்கள் தொடர்பு குழு, பெண்கள் தொடர்பு குழுக்களுக்கான கூட்டம் நடத்தப்படும். அவற்றில் நீதிக்கதைகளை வாசித்து காட்டுவேன்.
சிறுவர்களை ஓவியம் வரைந்து அனுப்பச் சொல்வேன்; என் மையத்தில் அனைவரையும் சிறுவர்மலர் வாசகராக மாற்றியதை எண்ணி மகிழ்கிறேன்.
எந்த வயதினரும் வாசிக்கும் விதமாக அமைந்துள்ள, சிறுவர்மலர் இதழுக்கு நன்றி. இந்த பணி பற்பல ஆண்டுகள் தொடர பிரார்த்தனை செய்கிறேன்.
- எஸ்.லட்சுமி, கடலுார்.
