
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 46; புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன். சிறுவர்மலர் இதழை, நீண்ட காலமாக படித்து வருகிறேன்.
இதில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை படிக்கும் போது, உணர்ச்சி வசப்பட்டு, பல நேரம் கண்ணீர் வடித்துள்ளேன். வாசகர்களின் அனுபவம், நெஞ்சை நெகிழ வைக்கிறது.
சிறுகதை, மினி தொடர், படக்கதை, மொக்க ஜோக்ஸ், குட்டி குட்டி மலர்களில் புகைப்படங்கள், புதிர், அதிமேதாவி அங்குராசு எல்லாம் உற்சாகம் தருகின்றன.
மழலைகள் வரைந்து பழக துாண்டுகோலாக உள்ளது, உங்கள் பக்கம் பகுதி. பிளாரன்சின் அறிவுரை அற்புதம்! இப்படி, அனைவரும் விரும்பும் குறிஞ்சி மலராக விளங்குகிறது, சிறுவர்மலர்.
ஒரு வாரம் படிக்க தவறி விட்டால், பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடும். வாரத்தில், சனிக்கிழமையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.
- ரா.செல்வராஜ், ராமநாதபுரம்