PUBLISHED ON : ஜூலை 23, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 68; சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். பள்ளியில், என் பேர குழந்தைகள், ஆங்கில வழியில் படிக்கின்றனர். நான் கூறும் தமிழ் கதைகளை மிகவும் ரசித்து கேட்டு மகிழ்கின்றனர்.
முன் அட்டையில் துவங்கி, கடைசி பக்கம் வரை தெவிட்டாத கருத்துகளை கொண்டுள்ளது சிறுவர்மலர்.
பழைய இதழ்களை வீட்டு நுாலகத்தில் பேணி காத்து வருகிறேன்.
அவ்வையார் கூறியதை போல், 'கற்றது கையளவு... கல்லாதது உலகளவு' என்பதை மனதில் கொண்டு, ஏற்கெனவே படித்து முடித்த சிறுவர்மலர் இதழ்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்ப படிக்கிறேன்.
வளர்க சிறுவர்மலர்! என் இதயம் கனிந்த அன்பு வாழ்த்துகள்!
- கே.ஜி.எப்.குமார், பெங்களூரு.
தொடர்புக்கு: 99002 58256

