PUBLISHED ON : பிப் 04, 2023

என் வயது, 68; கணவரும், நானும் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றோம். தினமலர் நாளிதழை, 20 ஆண்டு காலமாக படித்து வருகிறேன்.
பள்ளியில் இறை வணக்க கூட்டத்தின் போது, சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை, மாணவ, மாணவியருக்கு கூறுவோம். ஆர்வமாக கேட்பர். இப்போது, சிறுவர்மலர் இதழ் வந்ததும், பேத்தி முதலில் படித்து விடுகிறாள்.
அறுசுவையில் புதிய உணவை அறிமுகம் செய்கிறது, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி. மனதுக்கு விருந்தாக, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி தமாசுகள் உள்ளன. அங்குராசுவின் அறிவியல் கட்டுரைகள் அறிவுக்கு விருந்தாக உள்ளன. போட்டிகளில் பங்கேற்பது, சிந்தனையில் தெளிவை தருகிறது.
பள்ளி நினைவுகளை நிரப்பி மலர்ச்சி தருகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. வண்ண ஓவியங்கள், 'உங்கள் பக்கம்!' பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்றன.
நீதிக்கதைகள், சிறுவர்,சிறுமியரை நல்வழிப்படுத்துகின்றன. இளைஞர்களை பக்குவப்படுத்துகிறது, 'இளஸ்... மனஸ்!' பகுதி. இவ்வளவு சுவையும் நிறைந்துள்ள, சிறுவர்மலர் இதழை வாழ்த்துகிறேன்!
- சி.மல்லிகா, திண்டுக்கல்.