
என் வயது, 51; குடும்பத்தலைவி. சிறுவர்மலர் இதழை, 25 ஆண்டுகளுக்கும் மேல் படித்து வருகிறேன். பலாப்பழத்தில், எந்த சுளை இனிக்கும் என்று வேறுபடுத்த முடியாது; அதுபோல, சிறுவர்மலர் இதழில், பயன் இல்லாத பகுதி என எதையும் கூற முடியாது.
பிற்காலத்தில் உதவும் என, சேகரித்து வைத்திருந்த சிறுவர்மலர் இதழ்களை என் வீட்டருகே ஆங்கில பள்ளிக்கு வழங்கினேன். குழந்தைகளுக்கு உதவும் என எண்ணினேன்.
அவற்றை பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் முன்னிலையில் மழலை மாறாமல் நன்றி கூறிய பிஞ்சுகளைக் கண்டு அகம் மகிழ்ந்தேன். கோடி செல்வம் பெற்ற தருணமாக உணர்ந்தேன்.
சிறுவர்மலர் இதழ் படிப்பதால் ஒரு கூட்டு குடும்பத்தை நிர்வகிக்க தேவையான அன்பு, சகிப்பு, தன்னம்பிக்கை எல்லாம் பெற்றுள்ளேன். பல நுாற்றாண்டுகளுக்கு இந்த இதழ் நிச்சயம் மலர்ந்து கொண்டே இருக்கும்; தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழி காட்டும்.
- வி.லோகாம்பாள், திருப்பூர்.
தொடர்புக்கு: 93447 36407

