PUBLISHED ON : செப் 30, 2023

அ நிறம் | அளவு
என் வயது, 30; இல்லத்தரசியாக உள்ளேன். பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் படித்து வருகிறேன். இளமை பருவத்தில் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. திருமணத்துக்கு பின், என் கணவர் வழியாக அந்த நல்ல பழக்கம் ஏற்பட்டது. தினமலர் நாளிதழையும், இணைப்பு இதழ்களையும் மெல்ல மெல்ல படிக்க துவங்கினேன்.
இப்போது, வாசிப்பில் தீவிர ஆர்வம் காட்டுகிறேன். சிறுவர்மலர் இதழில் வரும் அத்தனை பகுதிகளும் படிக்க படிக்க புது உத்வேகம் தருகிறது. குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் சொல்லித்தர உதவுகிறது.
நீதி நெறிக்கதைகளும், அறிவு பூர்வ தகவல்களும் சிறுவர்மலர், சிறந்த, 'என்சைக்ளோபீடியா' என்பதை நிரூபிக்கிறது. குழந்தைகளோடு பெரியவர்களும் கொண்டாடும், சிறுவர்மலர் என்றும் சிறக்க வாழ்த்துகிறேன்!
- எம்.அபிராமி, திருப்பூர்.
தொடர்புக்கு: 88258 75868
