தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது 52; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். குடும்பத்தில் நீண்ட காலமாக, தினமலர் நாளிதழ் படித்து வருகிறோம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழை கையில் பெற்றவுடன் பொக்கிஷம் கிடைத்தது போல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம், அதில் இடம் பெறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, என் மாணவ பருவத்தையும், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளையும் கண்முன் நிறுத்துகிறது. பிள்ளைகளுக்கு விருப்பமான தொடர் கதை, சிறுகதைகள் மற்றும் அதிமேதாவி அங்குராசு பகுதி வியப்பு ஏற்படுத்துகின்றன.

வயிறு குலுங்க வைக்கும் மொக்க ஜோக்ஸ், சிறுவர், சிறுமியர் கைவண்ணத்தில், உங்கள் பக்கம் பகுதியில் ஓவியங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையை வளமாக்கும் வெற்றி தொடர், 'இளஸ்... மனஸ்...' மிகவும் பயனுள்ளது.

ஒவ்வொரு வாரமும் புதிய உணவு வகைகளை, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் கண்டு ருசித்து மகிழ்கிறோம். மலர்கள் போன்ற, குழந்தைகளின் புகைப்படங்களை, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் கண்டவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

சிறுவர்மலர் இதழின் ஒவ்வொரு பக்கமும், தலைவாழை இலையில் பரிமாறப்படும் அறுசுவை விருந்து என்பதில் ஐயமில்லை.

- ப.சிவகுமார், சென்னை.

தொடர்புக்கு: 79040 50917


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us