
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 28; இல்லத்தரசியாக உள்ளேன். சிறுவர்மலர் இதழை நீண்ட காலமாக படிக்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் இதன் வரவுக்காக காத்திருப்பேன். தொடர்ந்து படிப்பதால், நல்லறிவும், அனுபவமும் பெறுகிறேன்.
எனக்கு, 2 வயதில் மகன் இருக்கிறான். சிறுவர்மலர் இதழில் வெளியாகும் படக்கதைகளை காட்டி அவனுக்கு கற்பித்து வருகிறேன். சிறுகதைகளை அதில் உள்ள நீதியுடன் எடுத்து கூறுவேன். சிறப்புமிக்க, 'புதிர்' பகுதியை கவனித்து, மழலை மொழியில் ஆர்வமுடன் மகன் விடை கூறுவான். அப்போது மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
இளம் கன்று மனதில் படிக்கும் ஆசையை துாண்டும், வண்ணமிகு சிறுவர்மலர் இதழ், மேலும் வளர வாழ்த்துகிறேன்!
- சு.வா.எழில்மதி, சிவகாசி.
தொடர்புக்கு: 95974 31219