
என் வயது, 57; தினமலர் நாளிதழை, நீண்ட காலமாக வாசித்து வரும் குடும்பத்தை சேர்ந்தவன். இணைப்பாக வரும், சிறுவர்மலர் இதழை விரும்பி படிப்பேன்.
பணி நிமித்தமாக, 23 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாய் நகரில் வசித்தேன். அங்கு, தினமலர் நாளிதழ், மறுநாள் தான் கிடைக்கும். தவற விடாமல் அங்குள்ள பணம், 3 திர்ஹாம் கொடுத்து ஒவ்வொரு நாளும் வாங்கி விடுவேன்.
சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழ் குதுாகலம் தரும். முதலில், 'இந்த வயதில் படிக்கும் புத்தகமா இது...' என்று கேள்வி எழுப்பினர் நண்பர்கள். தொடர்ந்த வாரங்களில் அவர்களே முந்தி படிப்பதை வழக்கமாக்கி விட்டனர்.
தற்போது, சென்னையில் வசிக்கும் என் தம்பி ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர் இதழை தவறாமல் அனுப்பி வைக்கிறான். படித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
- ஜி.சத்தியமூர்த்தி, கும்பகோணம்.
தொடர்புக்கு: 82208 36122