PUBLISHED ON : செப் 28, 2024

என் வயது, 35; தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறேன். ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர் இதழை விரும்பி வாசிக்கிறேன்.
பள்ளி வாழ்வை நினைவூட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்களை படித்ததும் உத்வேகம் ஏற்படுகிறது. அந்த பாதிப்பில் காரைக்கால் யுவராஜீ உயர்நிலை பள்ளியில் என்னுடன் படித்தோரை ஒன்றிணைத்து பொருள் திரட்டி மேம்பாட்டிற்கு உதவியுள்ளேன்.
என் நான்கு வயது மகனுக்கு, சிறுவர்மலர் இதழில் வரும் படைப்புகளால் பயிற்சி தருகிறோம். இதை தவறாமல் படிப்பதால் நீதியுடன் கூடிய நம்பிக்கை எண்ணங்களை பெற முடிகிறது. இந்த அடிப்படையில் கல்லுாரியில் என் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துகிறேன்.
பதின் பருவ வயதில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதிகம். அவற்றுக்கு தீர்வு தரும் வகையில், 'இளஸ்... மனஸ்...' அறிவுரை பொருத்தமாக அமைகிறது. இதை படிப்பதால் கல்லுாரியில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு நல்ல ஆலோசனைகள் கூற முடிகிறது.
வயது வித்தியாசம் இன்றி, படித்து ரசிக்க ஏற்றது. பொக்கிஷம் போல் பாதுகாக்க வேண்டிய ஒன்றாக திகழ்கிறது, சிறுவர்மலர் இதழ்.
- சி.பாலசுப்ரமணியன், சென்னை.