
என் வயது, 22; கல்லுாரியில் படித்து வரும் மாணவி. சிறுவர்மலர் இதழை, 10 வயதில் துவங்கி படிக்கிறேன். இதழ் வரும் நாளான சனியன்று அதிகாலையே எழுந்து காத்திருப்பேன். தினமலர் நாளிதழ் வந்தவுடன் தேடி எடுத்து படிப்பேன். முழுமையாக படித்த பின்தான், அடுத்த பணியை பார்க்க போவேன்.
ஒவ்வொரு வாரமும், 'தொடர் கதை!' படிக்க ஆர்வம் ஊற்றெடுக்கும். அறிவை வளர்க்கும் விதமாக, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில் இடம் பெறும் கட்டுரைகளைக் கண்டு வியப்பேன். என் பள்ளிக்கால நினைவுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்!' கட்டுரை படிக்கும் போது, மீட்க முடிகிறது. அது நெகிழ்வூட்டும் வகையில், எளிய நடையில் உள்ளது.
சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படிப்பதால், நிறைய புத்தகங்களை தேடி வாசிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. படிக்கும் ஆர்வத்தை துாண்டி, மேன்மையான வாழ்வுக்கு வழிகாட்டியாக மலர்ந்து வரும், சிறுவர்மலர் இதழ் பல்லாண்டு வாழ்க!
- சு.சுஜிதா, திண்டுக்கல்.