
என் வயது, 86; அரசு கணக்கு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்; சிறுவர்மலர் இதழை ஆர்வமுடன் தொடர்ந்து படிக்கிறேன். அறிவுக்கண்ணை திறந்து விடும் பள்ளி ஆசிரியர்கள் செயல்பாட்டை மனதில் நிலைக்கும்படி செய்யும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள், இதழின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது.
காலத்திற்கு ஏற்ப, நகைச்சுவையை வெளிப்படுத்தும், 'மொக்க ஜோக்ஸ்!' பாராட்டத்தக்கது. பொது அறிவை வளர்க்கும், 'அதிமேதாவி அங்குராசு!' கட்டுரை நாளும் கருத்தில் கொள்ள வேண்டிய சிறப்புக்குரியது. சிறுவர், சிறுமியருக்கு, 'சிறுகதை!' மூலம், நீதியை போதிக்கிறது சிறுவர்மலர்.
வாழ்வதற்கு தேவையான குறிப்புகள் உடைய, 'இளஸ்... மனஸ்...' கேள்வி - பதில் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. மாணவர்களின் ஓவியத்திறனை வளர்க்கும், 'உங்கள் பக்கம்!' பகுதி பாராட்டுக்குரியது.
ருசியான உணவு குறிப்புகள் தரும், 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' கவனிக்கத்தக்கது. சிறியோர் முதல், பெரியோர் வரை, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அடங்கிய அறிவுக் களஞ்சியமாக ஜொலிக்கிறது, சிறுவர்மலர் இதழ்!
- மா.ரெங்கராஜன், மதுரை.
தொடர்புக்கு: 94894 83132