
என் வயது, 55; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழை எதிர்பார்த்து காத்திருந்து படிக்கிறேன்.
நெகிழ்ச்சி கலந்தது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. இதில் பகிரும் மாணவ பருவ அனுபவங்கள், என் பள்ளி பருவத்தில் நடந்த சுவராசியமான நிகழ்வுகளை மனக்கண்ணில் நிழலாட வைக்கின்றன.
நீதிபோதனையை தாங்கிய சிறுகதைகள், அறிவுக்கூர்மையை சோதிக்கும் புதிர் போட்டி, சிரிக்க, சிந்திக்க துாண்டும், 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள், அறிவுசார் பெட்டகமாக ஜொலிக்கும் அங்குராசு என பலவிதமாக வியப்பூட்டுகிறது.
நல் வழிகாட்டும் 'இளஸ்... மனஸ்...' அறிவுரை, சத்தான உணவு செய்முறை தாங்கி வரும், 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' போன்ற பகுதிகளால் மெருகேறியுள்ளது. அனைத்து வயதினருக்கும் பயன் தரும் அறிவுக்களஞ்சியம் சிறுவர்மலர் இதழ் என்றால் மிகையில்லை. அதன் ஆக்கப்பூர்வமான பணி வளரட்டும்!
- பொன்.வரதராஜூ, கோவை.