
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 70; சாய தொழில் செய்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. எல்லா பகுதிகளும் சிறுவர், சிறுமியர் சிந்தனையை துாண்டுவதாக உள்ளன. நல்ல விஷயங்களை நல்லபடியாய் நல்குகிறது.
சிறுவர்களின் அறிவைக் கூர்மையாக்கும் நுாலகமாக திகழ்கிறது. குழந்தைகளின் அழகான புகைப்படங்கள், சிறுவர் வரைந்த ஓவியங்கள், புதிர் போட்டிகள் என திறனை வெளிப்படுத்துகிறது. படக்கதை, தொடர்கதை, சிறுகதை, கட்டுரைகள் சிறப்பாக உள்ளன.
பாராட்டுதலுக்கு உரிய சிறுவர்மலர் இதழ், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பது என் ஆசை. இது விரைவில் நடக்கும் என நம்புகிறேன்!
- வி.ரவீந்திரன், ஈரோடு.
தொடர்புக்கு: 95782 03618