PUBLISHED ON : மார் 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 74; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழ் வாசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவன்.
சிறுவர்மலர் இதழ், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் கட்டுரை எழுதி பரிசு வாங்கியிருக்கிறேன். அதை படித்தவுடன் 1966ல் சக மாணவராக இருந்த நண்பர் என் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, 'எப்படி... எங்கே இருக்கிறாய்...' என்றுநா தழுத்தார்.
கண்ணீர் மல்க பேசியது, ஆனந்தமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இந்த ஜென்மத்தில் இதற்கு மிஞ்சிய சந்தோஷம் எனக்கு எதுவுமில்லை. இதற்கு வழிவகுத்தது சிறுவர்மலர் இதழ்தான். அது மேலும் வளர்ந்து மணம் வீச மனதார வாழ்த்துகிறேன்.
- ஏ.வேலுச்சாமி, கோவை.
தொடர்புக்கு: 88708 51368