
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 59. தையல் வேலை செய்து வருகிறேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக விரும்பி படித்து வருகிறேன். எனக்கு மிகவும் விருப்பமானது, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் வெளியாகும் பள்ளி அனுபவ கடிதங்கள். சிறுகதைகளும் சிறப்பாக உள்ளன. சிறுவர்மலர் இதழில் வெளியாகும் பயனுள்ள தகவல்களை மீண்டும் பயன்படுத்த வசதியாக என் டைரியில் குறித்து வைக்கிறேன்.
வீட்டில் ஓய்வாக இருக்கும்போது டைரியை புரட்டி எழுதிய குறிப்புகளை மீண்டும் படித்து மகிழ்கிறே ன். ஒரு இதழை படிக்காமல் தவறவிட்டாலும் தலையே வெடித்துவிடுவது போல் உணர்வால் தவிக்கிறேன்.
என் குடும்பத்தினரும் சிறுவர்மலர் இதழை படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதழின் தரம், சுவை மாறாமல் உள்ளது பெரும் வரப்பிரசாதமாக அமைந்து உள்ளத்திற்கு புதுப்பொலிவை ஊட்டுகிறது. வாழ்க சிறுவர்மலர்; வளர்க அதன் சேவை.
- மூ.வள்ளி, கோவை.