PUBLISHED ON : ஏப் 18, 2026

என் வயது, 64. 'தினமலர்' நாளிதழோடு, 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பயணித்து வருகிறேன். சிறுவர்மலர், சிறுவர்களுக்கு மட்டுமானது என, ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஓரிரு இதழ்களை படித்ததும், அது எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பயனுள்ளது என்பதை உணர்ந்தேன். அப்போது முதல், சிறுவர்மலர் இதழும் என் வாழ்க்கையின் ஓர் அங்கமானது.
அட்டையிலும், 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியிலும் இடம் பெறும் குழந்தைகளின் புகைப்படங்கள், மனதை கொள்ளை கொள்கின்றன. 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, பள்ளி வாழ்க்கையை அசை போட வைக்கிறது. 'இளஸ் மனஸ்!' பகுதி, வாழ்க்கையில் எழும் பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கிறது.
கட்டுரைகள், உலகை அறிந்து கொள்ளவும், 'மொக்க ஜோக்ஸ்!' வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறது. மூளை திறனை மேம்படுத்தும் பரிசு போட்டிகள், கரும்பு தின்ன கூலி தருகிறது. ஒவ்வொரு வாரமும் மலரும் சிறுவர்மலர், எல்லா பருவத்தினருக்கும் ஏற்ற சிறந்த பொழுதுபோக்கு இதழாக திகழ்கிறது.
- என்.ஸ்ரீதரன், சென்னை.
தொடர்புக்கு: 86107 10334
