PUBLISHED ON : மே 16, 2026

என் வயது, 71. பள்ளி தலைமையாசிரியராக பணி நிறைவு பெற்றேன். தித்திப்போடு வெளிவரும் தினமலர் நாளிதழின் இணைப்பான சிறுவர்மலர் இதழின் வாசகர் பெருவெள்ளத்தின், சிறு துளி நான். சனிக்கிழமை எப்போது வரும் என, ஏக்கம் கலந்த சிந்தனையுடன் இருப்பேன்.
சிறுவர்மலர் இதழில் வெளிவரும் ஆச்சரியமூட்டும், ஆயிரமாயிரம் அற்புத தகவல்கள் தரும் கட்டுரைகள், இனிய ஆலோசனைகளுடன் கூடிய, 'இளஸ் மனஸ்!' பகுதி, படிக்க படிக்க ஆனந்தமே.
'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி, மகத்தான அறுசுவை விருந்து. தாத்தாக்களிடம் ஓடி வரும் பேரக்குழந்தைகள் கேட்டு மகிழும் வகையில், சிறுவர்மலர் தரும் அர்த்தமுள்ள சிறுகதைகள் அத்தனையும் அற்புதம். இளம் ஓவியத்துாரிகைகளை, 'மழலையர் பக்கம்!' உற்சாகப்படுத்துகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, நினைக்க நினைக்க சிரிக்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' அபாரம்.
இவற்றை எல்லாம் கலந்து தொடுத்த கதம்பமாக, சிறுவர்மலர் உள்ளது. இதன் நறுமணம், தமிழ் கூறும் நல்லுலகிற்கு தனி வழி காட்டும்.
- பாரதி சங்கரலிங்கம், துாத்துக்குடி.
