PUBLISHED ON : அக் 04, 2019

* உலகுக்கு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை, 1887ல் அறிமுகப்படுத்தியது, நம் நாடு
* இயற்கை சமநிலையை காக்க, காடுகளை பாதுகாப்பது அவசியம். தாவரங்கள் பெருகி, தட்பவெப்பநிலையை சமன்படுத்துகிறது. அன்னிய செலாவணியை ஈட்டி தருகிறது
* காடுகள் சுற்றுலா பயணியரை கவர்கின்றன. உலகின் பல நாடுகளில், வனவிலங்கு காப்பகங்கள், புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாகவும் உள்ளன
* விலங்கினம் பற்றிய கல்வியறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் வனவிலங்கு பாதுகாப்பிடங்கள் உதவுகின்றன
* அழிந்து வரும், அபூர்வ விலங்கினங்கள், காடுகளை பெருக்குவதால், புத்துயிர் பெறுகின்றன
* சர்வதேச அளவில், காடு பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், 'விலங்குகள் சுதந்திரமாக வாழ, மொத்தக் காட்டுப் பகுதியையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்...' என கூறியுள்ளனர்.
ஆண்டு தோறும், அக்டோபர் முதல் வாரம், வன உயிரினப் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது.
