PUBLISHED ON : நவ 14, 2014

நவம்பர் 10: உலக அறிவியல் தினம்!
அமைதி மற்றும் முன்னேற்றத்தை மனதில் வைத்து வருடா வருடம் நவம்பர் 10ம் தேதியை உலக அறிவியல் தினமாக கொண்டாடுகின்றனர்.
உலகில் சிலர் சண்டை மற்றும் வன்முறையை தூண்டவும், இதே அறிவியலை தவறாக பயன் படுத்துகின்றனர்.
ஆகவே, ஐ.நா., இந்த நாளை... உலக உறுப்பு நாடுகள், அறிவியலை நற்காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த தூண்டும் வகையில் கொண்டாட தூண்டி வருகிறது. முதன் முதலில் 2002ம் ஆண்டு இந்த தினம் கொண்டாடப் பட்டது.
நவம்பர் 12: உலக நிமோனியா தினம்!
வருடா வருடம் நவம்பர் 12ம் தேதியை உலக நிமோனியா தினமாக கொண்டாடுகின்றனர். நுரையீரல் அயற்சியால் ஏற்படும் சிக்கல்களை அறிந்து, பாது காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு உணர்த்தும் விழா. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அறிவுரைகள் கூறப்படும் நாள்.
நவம்பர் 14 உலக சர்க்கரை நோயாளிகள் தினம்!
இன்று உலகில் அனைத்து தரப்பினருக்கும் வரும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தூண்டு வதே இதன் நோக்கம். சர்க்கரை நோயை வளரவிட்டால், கால்கள் பாதிக்கப்பட்டு இழக்க நேரிடும்.
நவம்பர் 15: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்!
வருடா வருடம் நவம்பர் 15ம் தேதி சர்வதேச சகிப்புத் தன்மை தினமாக கொண்டாட ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.
அடுத்தவர்களின் உரிமைக்கும் நம்பிக்கைக்கும், உரிய மதிப் பளிப்பதே சகிப்புத் தன்மையாகும்.
இதனை நாடுகளிடையே கடைபிடிக்கும்போது மன வருத்தம்....யுத்தம்... ஆகியவற்றிற்கு வேலை இருக்காது.
நாடுகளுக்கு இடையே இந்த சகிப்புத் தன்மை மிக மிக அவசியமாகிறது. ஆக இவற்றை வலியுறுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 16: தேசிய பதிப்பாளர் தினம்!
இந்த நாளில் தான் பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா துவக்கப்பட்டது. சமுதாயத்திற்கு பாதுகாவலனாகவும், அதே சமயம் தரம் காக்கவும் வலியுறுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்று பதிப்புகள் தான் மக்களின் கண்ணாடி! அதை சிறப்பாக வெளிக் கொணர்வதின் மூலம் மக்களை சிறந்தவர்களாகவும் மாற்ற உதவும்.
நவம்பர் 17: சர்வதேச மாணவர்கள் தினம்!
நவம்பர் 17ம் தேதி சர்வதேச மாணவர்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1939ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி செக்குடியரசின் பிராக்பல் கலை கழகத்தை நாசீஸ் முற்றுகையிட்டனர்.
1989ம் ஆண்டு இதே நவம்பர் 17ம் தேதி, செக்மாணவர்கள், ஜனநாயகம் காக்காத அரசுக்கு, எதிராக சிலிர்த்து எழுந்தனர்!
இவை உலக மாணவர்களுக்கு ஒரு பாடம். மாணவர்கள் மனது வைத்தால் அடக்கு முறை அரசுகள் காணாமல் போய் விடும் என்பதை உணர்த்தும் நாள்!
உலக நாடுகள் முன்னேற வேண்டுமானால், அதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம்! ஆக ஜனநாயக சிந்தனையை மாணவர்களிடையே தூண்டி, அவர்களை நாளைய பொறுப்புமிக்க குடிமக்களாக உயர்த்துவதே இதன் நோக்கம்!
நவம்பர் 20: சர்வதேச குழந்தைகள் தினம்!
நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், சர்வதேச அளவில், நவம்பர் 20ம் தேதியே சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்தான் நாளைய உலகம். இதனை வலியுறுத்தி, அவர்களை கல்வி சிறப்புகளில் ஜொலிக்கச் செய்வதே, இந்த சர்வதேச குழந்தைகள் தினத்தின் நோக்கம்!
இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்கள் உரிமை மற்றும் அன்புடன் ஒருவருக்கு ஒருவர் எப்படி விட்டுக் கொடுத்து வாழ்வது பற்றியும் போதிக்கவே இந்த தினம் உருவாகி கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 21: உலக தொலைக்காட்சி தினம்!
டெலிவிஷன் இன்று நம் வாழ்க்கையை மாற்றியதுடன்... சிறந்த பொழுது போக்கு சாதனமாகவும் மாறிவிட்டது. உலகம் முழுவதும் நடக்கும் தகவல்களை நொடியில் நம் முன் கொண்டு வந்து சேர்க்கிறது. இதன் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதியை உலக தொலைக்காட்சி தினமாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளது.
சிந்திக்கும் நாள்!
ஐ.நா... வருடா வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையை உலக சிந்தனை யாளர் தினமாக கொண்டாட கூறியுள்ளது. பாரம் பரிய சிந்தனையாளர்களின் நற்கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்று, அவற்றின் வழியில் நல்வழியில் நடக்கவும், நற்சிந்தனைகளை தொடரவும் தூண்ட கொண்டாடப்படும் நாள் இது!
சாலையோர விபத்துக்குள்ளானோர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் மூன்றா வது ஞாயிற்றுக்கிழமை, சாலை விபத்துக் குள்ளானவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குறைந் தது 4000 பேர் விபத்துகளின் மூலம் இறக்கின்றனர். அதுமட்டுமல்ல, மேலும் பல ஆயிரக்கணக் கானோர், படுகாயங்களினால் மருத்துவமனை களில் பல மாதங்கள் படுத்துக் கிடந்து உயிர் பிழைக்கின்றனர்.
சாலையில் செல்லும் போது, பாதுகாப்பை கடைபிடிக்க மக்களை வழிப்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ராஜிராதா
