தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யார் இவர்?

யார் இவர்?

யார் இவர்?


PUBLISHED ON : ஜன 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலை நேரம் சூரிய ஒளி எங்கும் பரவியிருந்தது. அப்போது சுருட்டை முடி பெண் ஒருத்தி சாலை வழியாக ஓடிக் கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் அவளுடைய தோழிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து விளையாடவே அவள் ஓடினாள்.

அப்போது குறி சொல்லும் கிழவி ஒருத்தி எதிரே வந்தாள். அவள் அந்தப் பெண்ணிடம், ''பாப்பா, எங்கே உன் கையைக் காட்டு பார்க்கலாம்,'' என்றாள்.

''இதோ என் கை,'' என்று கூறி தன்னுடைய கையை விரித்துக் காட்டினாள்.

இதைச் சிறிது தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி பார்த்து விட்டாள். உடனே அவள் மற்றவர்களிடம், ''ஏய், நமது மர்ஜாவைப் பாருங்கள், அந்தக் குறிகாரியிடம் கையை நீட்டிக் கொண்டு நிற்கிறாள்!'' என்றாள்.

உடனே எல்லாரும் அந்த சுருட்டைப் பெண் நிற்கும் பக்கம் பார்த்தனர்.

''அடியே மர்ஜா, அந்தக் கிழடு ஏதாவது உளறும், அதைக் கேட்டுக் கொண்டு நிற்காதே! ஓடிவா, சீக்கிரம்,'' என்று கத்தினர்.

சுருட்டை முடி பெண் அவர்களது பேச்சைக் கேட்கவில்லை. கையைக் காட்டிக் கொண்டே நின்றாள்.

கிழவி அவளது கை ரேகைகளைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ''எவ்வளவு அருமையான ரேகைகள், நீ பெரியவளானதும் உனக்குப் பேரும், புகழும் பெருகி வரப் போகின்றன. நிச்சயமாகச் சொல்கிறேன்,'' என்றாள்.

இப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எல்லாரும் அவள் அருகில் வந்துவிட்டனர். தோழிகள் வந்து சும்மா நிற்கவில்லை. சுருட்டை முடி பெண்ணைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

''ஏண்டியம்மா, உனக்குப் பேர் வரப் போகிறதாம். புகழ் வரப்போகிறதாம். அப்படியானால், நீ பெரிய சீமாட்டியாகி விடுவாயோ?'' என்று கேலியாகக் கேட்டாள் ஒரு பெண்.

''இல்லையடி இல்லை. இவள் பட்டத்து ராணியாகப் போகிறாள். பார்த்துக்கொண்டே இரு,'' என்று இன்னொருத்தி கிண்டலாகக் கூறினாள்.

இதே போல் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகக் கூறிக் கேலி செய்தனர். ஆனால், எவளுமே, இவள் பெரிய விஞ்ஞானியாகப் போகிறாள் என்று சொல்லிக் கேலி செய்யவில்லை. அப்படி எவளாவது சொல்லியிருந்தால், அவள் வாய்க்குச் சர்க்கரை வாங்கிப் போட்டிருக்கலாம். ஏன் தெரியுமா?

அந்தச் சுருட்டை முடி பெண் பெரியவளானதும் ஒரு பெரிய விஞ்ஞானியாகவே விளங்கினாள். ஆமாம், இப்போது புற்று நோயைக் குணப்படுத்தவும், வாந்தி பேதி, எலும்புருக்கிக் காய்ச்சல் முதலியவற்றிற்குக் காரணமான கிருமிகளைக் கொல்லவும் உபயோகப்படுத்துகிறார்களே ரேடியம், அதைக் கண்டுபிடித்தவளே அந்த சுருட்டை பெண்தான். இவளுக்கு ஒருமுறை அல்ல... இருமுறை நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. வேறு எவருக்கும் இப்படி கிடைத்ததில்லை. இப்போது தெரிந்திருக்குமே இவர் யார் என்று?

விடை: மேடம் கியூரிதான் அந்த பெண்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us