தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சோளத்திற்கு பட்டாடை கட்டியது யார்?

சோளத்திற்கு பட்டாடை கட்டியது யார்?

சோளத்திற்கு பட்டாடை கட்டியது யார்?


PUBLISHED ON : நவ 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டு போன்ற, நூல் வடிவத்தில் செடியின் நுனியில் குஞ்சம் போன்ற வளர்ச்சி இருக்கும். அதுதான் பூவின் சூல்முடி-வேறுபடுத்தி காண்பிக்கும் பண்பு. சோளத்தின் மையப்பகுதி -பெண் பூவின் கருவகம்-30 செ.மீ வளரும் - நீண்ட ஒட்டும் தன்மையுடனான சூல்முடி- சூல்முடியின் நுனியில் மகரந்ததூள் சேகரிக்கப்படும்.

சோளத்தாவரம் தனது தண்டு பகுதியின் உச்சியில் ஆண் பூக்களை வளர்க்கிறது. பெண் பூக்கள் முழு வளர்ச்சி அடையும்போது, பூவின் சூல்முடி காற்றில் பறக்கும் மகரந்ததூளை பிடிக்கிறது. சூல்முடியில் விழுந்த மகரந்த துகள், மகரந்த குழாய் மூலம் தனிப்பட்ட பெண்ணின் கருவகத்தை, அது இருக்கும் சோளக்கதிரில் மைய காம்பு முனையை அடைகிறது. செழுமையாக்கப்பட்ட நிலையில் பட்டு பழுப்பு நிறமடையும். வித்துக்களின் காய்ந்த வெளித்தோல் கூட்டம் வலிமையாய், இலைபோலவும் பழுத்தினை காக்கும்.

பெண்பூ:



ஒரு தனிப்பட்ட பெண் சோளப்பூ ஒரு கருவகம். அதனை சுற்றி இரண்டு இலை போன்ற பாதுகாப்பு மூடியுடன் இருக்கும். கருவகத்தில் இருந்து நீண்ட ஒட்டும் முனையுடன் ஒட்டும் சூல்முடியை கொண்டு அதன் மூலம் மகரந்த துகள்களை பிடிக்கும்.

ஒவ்வொரு பழுத்த சோளமும் முழுமையான பழமாகிறது. அப்போது அவை கோதுமை அல்லது அரிசி தானியத்தை போல இருக்கும்.

ஆண் பூவின் முட்கள்:



ஆண் பூவின் முட்கள் தண்டின் நுனியில் இருந்து வெளியேறுகிறது. ஒவ்வொரு ஆண் பூவும் 3 மகரந்த தூள் கொண்ட பகுதிகளை உடையது.

பெண் பூவின் பட்டு!:



பூவின் ஒவ்வொரு பட்டும் பல பெண் பூக்களை தனது ஒவ்வொரு இலையின் அடியிலும் கொண்டிருக்கும். பூக்கள் தண்டின் அடியில் உருவாவதை 'காப்' என்பர்!

சோளத்தாவரத்தில் மகரந்த சேர்க்கை!:



சோள தாவரத்தில் ஆண், பெண் பூக்கள் ஒவ்வொரு தாவரத்திலும் தனித்தனியே இருக்கும். பெண் பூக்கள் முழு வளர்ச்சி அடைவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே ஆண் பூக்கள் முழு வளர்ச்சி அடைந்துவிடும். அதனால் ஒரே தாவரத்தில் இருக்கும் ஆண் பூக்கள், பெண் பூக்களின் இடையே மகரந்த சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்கள் தங்கள் மகரந்த துகள்கள் அனைத்தும் உதிர்த்த நிலையில் இருக்கும்போது, பெண் பூக்கள் முழு வளர்ச்சி அடைகின்றன. பின் பழம் அல்லது சோளம் உருவாகிறது.

காற்றின் கருணையை எதிர் நோக்கியுள்ளது சோளம். வெவ்வேறு தாவரங்களின் ஆண், பெண் பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு காற்றினையே நம்பி இருக்கிறது சோளம். மிக நுண்ணிய வட்ட வடிவ மகரந்த துகள்கள் எடையில் மிக குறைவான எடையே. இவற்றில் இறகு போன்ற மேல் தோல் இருப்பதால், எளிதில் காற்றில் எடுத்து செல்லப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us