தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏன்டா அழிச்ச!

ஏன்டா அழிச்ச!

ஏன்டா அழிச்ச!


PUBLISHED ON : பிப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், படிப்பை முடித்து, முன் அனுபவம் ஏதும் இல்லாமல், முதலாம் வகுப்புக்கு ஆசிரியையாக சேர்ந்தேன்.

மாணவர்களிடம், நோட்டை எடுத்து எழுதுமாறு கூறி விட்டு, கரும்பலகையில் எழுதி போட ஆரம்பித்தேன். இடமில்லாத காரணத்தால், ஒரு பக்கத்தை மட்டும் அழித்து விட்டு, பாடத்தை எழுதி முடித்து விட்டு திரும்பி பார்த்தேன்.

ஒரே, 'ஷாக்' அனைவரும் அவர்கள் நோட்டில் எழுதியதை அழித்து கொண்டிருந்தனர். புரியாமல், 'பிரதீப், ஏண்டா எல்லாத்தையும் அழிக்குற...' என்று கேட்டேன். மழலை மொழியில், 'மிஸ், நீங்க தப்பா எழுதி போட்டதால எழுதியதை அழிச்சீங்களா அதான் நானும் அழிச்சிட்டேன்...' என்றானே பார்க்கலாம். நான் இடம் இல்லாமல் அழித்ததை தவறாக புரிந்து விட்டனர்.

மாணவர்களிடம் எந்த நோட்டில் எழுத வேண்டும்; எந்த பக்கம் எழுத வேண்டும்; எவ்வாறு எழுத வேண்டும்; அவர்கள் முடிக்கும் வரை எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பது, எனக்கு முன் அனுபவம் இல்லாததால் தெரியவில்லை.

கடந்த, ஆறு ஆண்டுகள் இதே பள்ளியில், ஆசிரியையாக வேலை பார்த்து வரும் எனக்கு, இந்த நிகழ்வை நினைக்கும் போது சிரிப்பு தான் வரும்!

- எஸ்.சீதாலெட்சுமி, யாகப்பாநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us