தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மஞ்சள் சிவப்பாகும் கலர் மேஜிக்!

மஞ்சள் சிவப்பாகும் கலர் மேஜிக்!

மஞ்சள் சிவப்பாகும் கலர் மேஜிக்!


PUBLISHED ON : ஜூன் 05, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள், மஞ்சள் நிற துணி, சுண்ணாம்புத் தூள், தண்ணீர், மற்றும் பாத்திரம்.

இந்த மேஜிக் வித்தை ஒரு தந்திர விளையாட்டுதான். இதை மிகுந்த முன்னேற்பாடுடன் செய்ய வேண்டும். உங்கள் முன் உள்ள பார்வையாளர்களிடம் ஒரு மஞ்சள் நிறமுள்ள துணியை காட்டுங்கள். இந்த மஞ்சள் நிற துணியை எடுத்து நன்றாக விரித்துக் காட்டி, உதறுங்கள். பின்னர் தண்ணீர் உள்ள பாத்திரத்தையும் பார்வையாளர்களிடம் காட்டுங்கள். பிறகு அந்த துணியை பார்த்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு, 'ஓம் க்ரீம் க்லீம் இந்த மஞ்சள் துணியை சிவப்பு நிறமாக மாற்றிவிடும்... ம்... ம்... கலிம் க்ரீம்' என்று மந்திரம் போட்டு விட்டு பாத்திரத்தில் இருக்கும் துணியை வெளியே எடுங்கள். ஆஹா மஞ்சள் துணி, சிவப்பு துணியாக மாறி இருக்கும். இதைப் பார்க்கின்ற பார்வையாளர்கள் அசந்துதான் போவார்கள்.

இந்த மேஜிக் செய்யும் ரகசியம்.

இந்த மேஜிக் செய்வதற்கு முன்பாக மஞ்சள் தூளை நீரில் கலந்து கலக்கி, அதில் ஒரு மஞ்சள் நிற துணியை நனைத்து ஊற வைத்து, வெளியில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தண்ணீர் பாத்திரத்தின் அடியில் ஒரு செ.மீ. அளவு சுண்ணாம்பு எடுத்து பூசி வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் மஞ்சள் துணியை போட்டு விட்டு, அதை எடுக்கும்போது சுண்ணாம்பு தண்ணீரில் கலக்கும்படி ஒரு கலக்கு கலக்கி அதில் துணியை அமுக்கி எடுத்தால் மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்ததும் மஞ்சள் துணி, சிவப்பாக மாறும். இதில் மேஜிக் ரகசியம் மஞ்சள், சுண்ணாம்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us