PUBLISHED ON : டிச 26, 2014

காஷ்மீரின் தால் ஏரியை ஒட்டி, மொகலாயர் காலத்திலேயே அழகு மிகு தோட்டங்களை ஷாஜகானும் பின்னாளில் ஜஹாங்கீரும் அமைத்தனர். ஐரோப்பாவின் பூந்தோட்ட நாடு என கருதப்படுவது நார்வே. இந்த நார்வே நாட்டிலிருந்து 60 வகையான தூலிப் பூக்களின் விதைகளை கொண்டு வந்து பயிரிட்டு, 1998ல் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்தனர்.
20 ஏக்கரில் அமைந்துள்ள தூலிப் பூங்கா இன்று சுற்றுலா பயணிகளின் முக்கிய கவர்ச்சிமிகு இடமாக மாறி விட்டது.
தற்போது 3 லட்சம் தூலிப் பூக்களின் விதைகளை இறக்குமதி செய்து பூங்கா விற்கு மேலும் அழகு கூட்டியுள்ளனர். இந்த பூவுக்கு ஈரபூமி தேவை. அத்துடன் ஈர களிமண்ணும் கூடுதல் வசதி. அதற்கு காஷ்மீர் வசதியாக இருக்கவே, இன்று தால் ஏரி இந்திராகாந்தி பூங்கா... பூலோக சொர்க்கமாக மாறி விட்டது. இங்கு ஒரு வண்ண பூ, இரு வண்ணப்பூ, பல வண்ணப் பூக்கள்... என சாரிசாரியாக வளர்த்துள்ளது சூப்பர். காஷ்மீர் போனா பார்க்க மறந்துடாதீங்க செல்லம்ஸ்!
- திலீப்.
