தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளநீர் ரசம்!

இளநீர் ரசம்!

இளநீர் ரசம்!


PUBLISHED ON : ஏப் 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

இளநீர் - 2

வேக வைத்த துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி

தக்காளி - 1

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம் - சிறிது

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

உப்பு - தேவைக்கு ஏற்ப

புளி - தேவையான அளவு

நெய் - 2 தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு.



செய்முறை:


உப்பு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அதில், தக்காளி, வழுக்கை தேங்காயாக இருந்தால் அதையும் போட்டு பிசைந்து, மிளகு, சீரகத்தை பொடித்து போட்டு, வேக வைத்த துவரம் பருப்பை கரைத்து ஊற்றவும்.

கடாயில் நெய் ஊற்றி, கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து,அதில், கரைத்து வைத்த ரசக்கலவையை ஊற்றவும். சற்று சூடேறிய பின், இளநீரை ஊற்றி, நுரைத்து வந்ததும் இறக்கவும்; தொண்டைக்கு இதமான இளநீர் ரசம் தயார்!

- பி.கவிதா, சிதம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us