தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/ஜூன் - 2013

ஜூன் - 2013

ஜூன் - 2013


PUBLISHED ON : டிச 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்

ஜூன் 6: அந்தரத்தில்...: ஜூன் 6ல், பழனி மலைக்கு சென்ற ரோப்கார், 250 அடி உயரத்தில் திடீரென பழுதாகி நின்றது. பயணித்த பக்தர்கள் அலறினர். 3 மணி நேர போராட்டத்துக்குப்பின், அனைவரும் பத்திரமாக மீட்பு.

ஜூன் 16: தமிழக கடலோரப் பகுதிகளில், 30 இடங்களில் மெரைன் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.

ஜூன் 17: தமிழக அமைச்சரவை 10வது முறையாக மாற்றம். எஸ்.பி.சண்முகநாதன், அப்துல் ரஹீம் ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவியேற்பு. முகமது ஜான் மற்றும் செல்லபாண்டியன் நீக்கம்.

ஜூன் 20: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மடப்பள்ளி, புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறப்பு.

ஜூன் 27: இது முதல் முறை : தமிழகம் சார்பில் ராஜ்யசபாவில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு ஜூன் 27ல் தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க.,வில் இருந்து (மைத்ரேயன், அர்ஜூனன், ரத்னவேல், லட்சுமணன்) 4 பேரும், இ.கம்யூ., கட்சியில் இருந்து ராஜாவும், தி.மு.க, சார்பில் கனிமொழியும் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் ராஜ்யசபாவுக்கு தேர்தல் நடப்பது, 17 ஆண்டுகளுக்குப்பின் இதுவே முதல்முறை.

ஜூன் 28: முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பயணம்.

ஜூன் 8: கடந்த 2012 அக்டோபரில் சென்னை கடலில் தரைதட்டி நின்ற பிரதீபா கப்பலை, அதனை வாங்கிய துபாய் நிறுவனம் சென்னையில் இருந்து இழுத்து சென்றது.

இந்தியா

ஜூன் 1: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் தேர்வு.

ஜூன்: இந்திய - சிங்கப்பூர் ராணுவம் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜூன் 4: 15 வயது சிறுவன் ராகவ் ஜோனிசா, எவöஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை. இந்தியா சார்பில் குறைந்த வயதில் இச்சாதனையை நிகழ்த்தியவர் இவரே.

ஜூன் 5: குஜராத்தில் 4 சட்டசபை மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 6 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி.

* 2017ம் ஆண்டுக்குள், இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 34 கோடியாக உயரும் என ஆய்வில் தகவல்.

ஜூன் 6: அருணாசலப்பிரதேசத்தில், முற்றிலும் மகளிர் போலீசாரைக் கொண்ட முதல் மகளிர் காவல்நிலையம் துவக்கம்.

ஜூன் 8: கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன்சிங்கின் வெளிநாட்டு பயணத்துக்காக 642 கோடி ரூபாய் செலவு.

ஜூன் 9: எதிர்ப்புக்கு பின் ஆதரவு: கோவாவில் ஜூன் 9ல், நடந்த பா.ஜ., தேசிய செயற்குழுவில், பா.ஜ., தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த தலைவர் அத்வானி, தான் வகித்த கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். பின் பா.ஜ., தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அறிவுறுத்தலை தொடர்ந்து, மூன்றே நாட்களில் ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இதற்கிடையே மோடிக்கு எதிர்ப்பு

தெரிவித்து, 17 ஆண்டுகளாக தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் இருந்து வெளியேறியது.

ஜூன் 17: மத்திய அமைச்சரவை மாற்றம். தமிழகத்தின் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு. புதிய ரயில்வே அமைச்சராக மல்லிகார்ஜூன கார்கே நியமனம்.

ஜூன் 18: பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் புதிய தலைவராக எஸ்.கே.ராய் நியமனம்.

ஜூன் 19: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி முறிவுக்குப்பின், பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 126 எம்.எல்.ஏ., க்கள் ஆதரவுடன் நிதிஷ் வெற்றி.

ஜூன் 20: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 2 நாள் பயணமாக ஈராக் சென்றார். 23 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் ஒருவர் ஈராக் செல்வது இதுவே முதல்முறை.

ஜூன் 24: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி 3 நாள் பயணமாக இந்தியா வந்தார்.

ஜூன் 26: காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான, 'அமர்நாத் யாத்திரை' துவக்கம்.

ஜூன் 27: காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கனவான, பானிகல் - குவாசிகண்ட் இடையேயான 18 கி.மீ., ரயில் சேவையை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கினார்.

ஜூன் 28: இந்திய ரயில்வே, எஸ்.எம்.எஸ்., மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டத்தை தொடங்கியது.

ஜூன் 29: இந்திய விமான மேம்பாட்டு நிறுவனம், 11 மாநிலங்களில் குறைந்த வருமானம் கொண்ட 50 விமான நிலையங்களை அமைக்க முடிவு.

உலகம்

ஜூன் 2: பாலஸ்தீனத்தின் புதிய பிரதமராக ரமி ஹம்தல்லாஹ் பதவியேற்பு.

ஜூன் 3: மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவுகளில், 5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு.

ஜூன் 4: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறை செயலராக சூசன் ரைஸ் பொறுப்பேற்பு.

ஜூன் 5: ஜப்பானில் மணிக்கு 500 கி.மீ., வேகத்தில் செல்லும் 'புல்லட்' ரயில்

அறிமுகம்.

* மீண்டும் நவாஸ் ஷெரீப்: பாகிஸ்தானில் நடந்த பிரதமர் தேர்தலில், நவாஸ் ஷெரீப்பின் பாக்., முஸ்லீம் லீக், அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதிபராக இருந்த ஆசிப்

அலி சர்தாரியின் பாக்., மக்கள் கட்சி, இம்ரான் கானின் டெக்ரீக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் தோல்வியை தழுவின. ஜூன் 5ம் தேதி, பாக்., புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றார். இது இவருக்கு 3வதுமுறை.

ஜூன் 6: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக, ஐ.எப்.எஸ்., அதிகாரி ராகவன் நியமனம்.

ஜூன் 8: மறைந்த பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் மகள் பாரிஸ் தற்கொலை முயற்சி.

* பாகிஸ்தானில் தட்டம்மை நோய் தாக்குதலுக்கு 148 சிறுவர்கள் பலி.

ஜூன் 9: சீனாவில் சியாமென் நகரில் பாலத்தில் சென்ற பஸ் திடீரென தீப்பிடித்ததில் 47 பேர் பலி. 33 பேர் காயம்.

ஜூன் 12: கின்னஸ் புத்தகத்தின் படி, உலகின் வயதானவரான ஜப்பானின் ஜிரோமென் கிமுரா (116 வயது) மறைந்தார்.

ஜூன் 14: உலக மக்கள்தொகை 2050ம் ஆண்டில், 960 கோடியாக உயரும் என ஐ.நா., ஆய்வில் தகவல்.

ஜூன் 15: ஹசன் ரூவானி, ஈரானின் புதிய அதிபராக நியமனம்.

ஜூன் 17: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா நாடுகள் பங்கேற்ற ஜி8 மாநாடு, இங்கிலாந்தில் நடந்தது.

ஜூன் 24: இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு, 'பாலியல் குற்றச்சாட்டில்' 7 ஆண்டு சிறை.

'நியூஸ் ரேங்க்'

1. தேய்பிறையில் தே.மு.தி.க., : விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாண்டியராஜன், ஜூன் 12ல், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். இவர் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்த, 7வது தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஆனார்.

2. 30 ஆண்டு இல்வாழ்க்கை முறிவு: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனது மனைவி யூட்மிளா புடினாவை, ஜூன் 7ல், விவாகரத்து செய்தார். இவர்கள் இருவரும் 1983ம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

3. இனி 10 ஊர்களில்: சென்னையில் இயங்கி வந்த 'அம்மா உணவகம்', ஜூன் 2 முதல், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளிலும் துவங்கியது.

விளையாட்டு



ஜூன் 2: பி.சி.சி.ஐ., தற்காலிக தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமனம்.

ஜூன் 8: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் செரினா, ரஷ்யாவின் ஷரபோவாவை வீழ்த்தி, கோப்பை வென்றார்.

ஜூன் 9: பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் நடால், சக வீரர் பெரரை வீழ்த்தி, கோப்பை வென்றார்.

ஜூன் 17: பிங்கிக்கு கவுரவம்: உ.பி.,யை சேர்ந்த இளம் சிறுமி பிங்கி சோன்கருக்கு, 11, பிறவியிலேயே, உதடு பிளவுபட்டு இருந்தது. வறுமை காரணமாக இதை சரி செய்ய முடியாமல் தவித்தார். பின் அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்மைல் டிரெய்ன்' தொண்டு நிறுவனம்

இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய, இக்குறைபாடு சரி செய்யப்பட்டது. இவரை கவுரவப்படுத்தும் விதமாக, விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் காயின் (டாஸ்) சுண்டிவிடும் கவுரவம் வழங்கப்பட்டது.

ஜூன் 23: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் தேர்வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us