PUBLISHED ON : டிச 29, 2013
தமிழகம்
நவ., 1: தமிழக அமைச்சரவை 12வது முறையாக மாற்றியமைப்பு. புதிதாக விஜயபாஸ்கர் சுகாதார துறை அமைச்சராக பதவியேற்பு.
நவ., 5: 2013ம் ஆண்டுக்கான டி.இ.டி, தேர்வு முடிவு வெளியீடு. 22 ஆயிரம் பேர் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி.
நவ., 6: சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.
நவ., 7: தஞ்சாவூர் அருகே விளாரில் தமிழ் அமைப்புகளால் அமைக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இதன் சுற்றுச்சுவர் பொது இடத்தில் கட்டப்பட்டதாக, தமிழக அரசு அதனை இடித்து தரைமட்டமாக்கியது.
நவ., 10: தமிழக சிறப்பு இளைஞர் காவல்படையில் சேர்வதற்கான எழுத்துத்தேர்வு நடந்தது.
நவ., 20: சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய, 'அம்மா உணவகம்' திறப்பு.
நவ., 21: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை, இலங்கை போலீசார் கைது செய்தனர்.
நவ., 25: கேரளாவில் இருந்து தமிழகத்தின் ஏழு மாவட்ட விளைநிலங்கள் வழியாக கர்நாடகாவுக்கு, எரிவாயு குழாயை கெயில் நிறுவனம் அமைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு.
நவ., 26: இடிந்தகரை சுனாமி காலனியில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி.
நவ., 27: ஜெயேந்திரர் விடுதலை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கணக்காளராக இருந்த சங்கரராமன், 2004 செப்., 3ம் தேதி, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். 2005ல் வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் துவங்கியது. 370 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் பலர் பிறழ் சாட்சியம் அளித்தனர். 8 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில், நவ., 27ல் தீர்ப்பு வெளியானது. ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தியா
நவ., 2: ஆந்திராவின் விஜயநகரம் அருகே கோட்லம் என்ற இடத்தில் ஆலப்புழை - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதாக ஏற்பட்ட வதந்தியால் ரயிலில் இருந்து குதித்தனர். இவர்கள் மீது எதிரே வந்த ரயில் மோதியதில் 10 பேர் பலி.
நவ., 3: ஐ.நா., சபையின் கணக்கு தணிக்கையாளராக, இந்தியாவின் மத்திய தணிக்கை துறை தலைமை அதிகாரி சசிகாந்த் சர்மா தேர்வு. 6 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.
நவ., 5: பகுஜன் சமாஜ் எம்.பி., தனஞ்ஜெய் சிங்கின் மனைவி, தனது வீட்டு பணிப்பென் இறந்த வழக்கில் கைது.
நவ., 7: தகுதியில்லாத 830 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை, 15 நாட்களுக்குள் உத்தர பிரதேச அரசு திரும்ப பெற வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு.
* குவைத் பிரதமர் ஷேக் ஜாபர் அல் - முபாரக், அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை.
நவ., 13: இங்கிலாந்து பிரதமர் கேமரூன், 2 நாள் பயணமாக இந்தியா வருகை.
நவ., 20: இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 6 நாட்கள் நடந்தது. இவ்விழாவில் கலை மற்றும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய திரைப் படத்துக்கு, இந்திய சினிமா நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது.
நவ., 22: 'ஹெலன்' புயல் ஆந்திராவை தாக்கியது.
நவ., 16: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா' எனும் விமானம் தாங்கி போர்க்கப்பல், இந்தியாவிடம் ஒப்படைப்பு. ரஷ்யாவில் நடந்த இவ்விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோனி, ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி, ராணுவ அமைச்சர் சர்க்கே
ஆகியோர் பங்கேற்பு.
நவ., 17: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகிய இருவருக்கும், நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
நவ., 21: தேஜ்பால் கைது: 'தெஹல்கா' வார இதழ் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால். அரசியல் தலைவர்கள் மீதான பல குற்றங்களை அம்பலப்படுத்தி பிரபலமானவர்.
நவ., 21ல், கோவாவில் சக நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கொடுத்த செக்ஸ் குற்றச்சாட்டில், 6 மாதம் பதவியை ராஜினாமா செய்தார். நவ., 30ல், கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நவ., 28: போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வழக்கில் மும்பை தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு.
உலகம்
நவ., 1: விடுதலை புலிகளின் ஊடகப்பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியா போரின் போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் போரில் கொல்லப்படவில்லை. ராணுவ வீரர்கள் அவரை சித்ரவதை செய்து கொன்றுள்ள வீடியோவை 'சேனல்-4' தொலைக்காட்சி வெளியிட்டது.
நவ., 2: ஆசியா - ஐரோப்பாவை இணைக்கும் வகையில் துருக்கிக்கும், ஜப்பானுக்கு இடையே கடலுக்கடியில் சுரங்க ரயில்பாதை திறக்கப்பட்டது. இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் பேர் பயணம் செய்வர். 2004ல் பணி தொடங்கப்பட்டது. செலவில் 4ல் ஒரு பங்கு ஜப்பான்
வழங்கியது.
நவ., 3: 'தேரிக் இ தலிபான்' என்ற தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹக்கி முல்லா மெஹ்சூத், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
நவ., 4: சவுதி அரசு, ஆண்டின் துவக்கத்தில், 'நிதாகத்' என்ற புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்தது.
நவ., 5: வங்கதேசத்தில் 2009ல், ராணுவத்துக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 79 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் 152 புரட்சியாளர்களுக்கு வங்கதேச கோர்ட் மரண தண்டனை வழங்கியது.
நவ., 7: 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, ரஷ்யாவில் 2014 பிப்ரவரியில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் ஜோதி, 'சோயூஸ்' விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
நவ., 10: நான்காவது புயல்: உலகின் 4வது பெரிய புயல் என கணிக்கப்பட்ட 'ஹையான்' புயல், பிலிப்பைன்சின் சமர் மற்றும் லெய்டே தீவை நவ., 10ல் மணிக்கு 340 கி.மீ., வேகத்தில் தாக்கியது. 70 சதவீத வீடுகள் தரைமட்டமாகின. ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
* இப்படியும் பெற்றோர்: 2008ல் உ.பி., யில் 14 வயது பெண் ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். 5 ஆண்டுகளாக சி.பி.ஐ., இவ்வழக்கை விசாரித்தது. முடிவில் ஆரூஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் - நூபுர் தல்வார் தான் கொலையை செய்தனர். இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நவ., 26ல் காஸியாபாத் கோர்ட் தீர்ப்பு.
'நியூஸ் ரேங்க்'
1. ஏ.டி.எம்., பாதுகாப்பானதா: நவ., 20ல், பெங்களூரு கார்ப்பரேஷன் வங்கி ஏ.டி.எம்.,ல், பணம் எடுத்த, வங்கி பெண் அதிகாரி ஜோதி, ஏ.டி.எம்., மையத்துக்கு உள்ளேயே மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
2. எதிர்ப்பை மீறி: 23வது காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நவ., 15ல் நடந்தது. இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என தமிழர்கள் கோரிக்கை. இதனால் பிரதமர் மன்மோகன் புறக்கணிப்பு. ஆனால், வெளியுறவு அமைச்சர் குர்ஷித் பங்கேற்பு.
3. முதல் பெண்கள் வங்கி: நாட்டின் முதல் பெண்கள் வங்கியான 'பாரதிய மஹிளா வங்கி', டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 இடங்களில் நவ., 19ல், துவக்கப்பட்டது. தலைவராக உஷா அனந்த சுப்ரமணியம் பொறுப்பேற்பு.
விளையாட்டு
நவ., 2: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, 3-2 என, இந்தியா கைப்பற்றியது.
நவ., 3: கோஹ்லி 'நம்பர்-1': இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி. 'சேஸ்' மன்னனான இவர், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் தலா 1, ஆஸ்திரேலிய தொடரில் 2 சதங்கள் அடிக்க, ஐ.சி.சி., ஒருநாள் பேட்ஸ்மேன்கள் 'ரேங்கிங்' பட்டியலில், முதல் முறையாக 'நம்பர்-1' இடம் பெற்றார் (நவ., 3). இந்த ஆண்டு பங்கேற்ற 34 போட்டிகளில், மொத்தம் 1268 ரன்கள் குவித்து அசத்தினார். ஐ.சி.சி., யின் கனவு ஒருநாள் அணியில், கோஹ்லிக்கு இடம் கிடைக்காதது பெரும் ஏமாற்றம் தான்.
நவ., 4: ஆஸ்திரேலியாவில் நடந்த சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன்.
நவ., 8: 'ஆல்-ரவுண்டர்' அஷ்வின்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், 27. டெஸ்ட் அரங்கில் 2011, நவ., 6ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். இதில் 22, அடுத்து ஆஸ்திரேலிய தொடரில் 29 விக்கெட் சாய்த்து மிரட்டினார். கோல்கட்டா டெஸ்டில் பேட்டிங்கில் சதம் (124) அடித்து அசத்த, டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்கள்' பட்டியலில் அஷ்வின் (405) 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
நவ., 11: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 'பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஹீனா சித்து.
நவ., 15: கடைசி டெஸ்டில் களமிறங்கிய இந்திய வீரர் சச்சின், 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
நவ., 18: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், செக் குடியரசு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
நவ., 20: பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் மெஸ்சி, சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான 'கோல்டன் பூட்' விருதை தட்டிச்சென்றார்.
* மும்பை ஹாரிஸ் ஷீல்டு தொடரில், பள்ளி சிறுவன் பிரிதிவ் ஷா, தனிநபராக 546 ரன்கள் குவித்து சாதித்தார்.
நவ., 21: மகுடம் இழந்த ஆனந்த்: இந்தியாவின் செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், 43. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 2000, 2007, 2008, 2010, 2012 என, ஐந்து முறை கோப்பை வென்றவர். முதன் முறையாக சொந்தமண்ணில் (சென்னை) நடந்த இப்போட்டியில், இளம் வீரர் நார்வேயின் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் ஒரு சுற்றில் கூட வெற்றி பெறாத இவர், 3.5-6.5 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து, நவ., 21ல் பட்டத்தை பறி கொடுத்தார்.
நவ., 29: பொருத்தமான ஜோடி : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், 28. தமிழகத்தை சேர்ந்த இவர், இதுவரை 63 டெஸ்ட் (1,000 ரன்கள்), 67 ஒருநாள் (1,263), 9 சர்வதேச 'டுவென்டி-20' (100 ) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர், இந்தியாவின் 'நம்பர்-1' ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகல், 27, இடையே காதல் மலர்ந்தது. நவ., 29ல் நிச்சயதார்த்தம் நடந்தது. 2014ல் திருமணம் நடக்க உள்ளது.
