தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/ஆகஸ்ட்

ஆகஸ்ட்

ஆகஸ்ட்


PUBLISHED ON : ஆக 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்



ஆக., 2: திருவாங்கூர் ராஜவைத்தியசாலை டாக்டர் விஜயகுமார் மீது 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



ஆக., 5: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலைவழக்கில் இன்ஜினியரிங் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா உட்பட ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவு.





ஆக., 6: லஞ்சம் வாங்கிய, தமிழக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் எழிலரசி கைது.





* நிவாரண கப்பல் 'எம்.சி.பி., ஆம்ஸ்டர்டாம்' கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது.





ஆக., 10: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.,வில் இணைந்தார்.





* தமிழகத்தில் முதல்முறையாக பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் பலி.





* கம்பம் இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சசிக்குமார் மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.





ஆக., 18: தமிழகத்தில் பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. 67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.





ஆக., 21: கலர் 'டிவி' ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.





* தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி.

ஆக., 24: சென்னைக்கு அருகே பனையூரில் கப்பல் கேப்டனாக இருந்த இளங்கோ என்பவரின் வீட்டில் சண்முகசுந்தரம் என்பவர் நுழைந்து சுட்டதில் 2 பேர் பலி.



ஆக., 26: அடுத்த கல்வி ஆண்டில் இருந்து(2010 - 2011) ஒன்றாம் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வி துவக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.





ஆக., 27: கிராமப்புற உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்வு.





ஆக., 28: சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆறு குழந்தைகளை கொன்ற பெண் மந்திரவாதி பெருமாயி கைது. * சென்னை மியாட் மருத்துவமனையில் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் உடல் தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து.





ஆக., 31: துணைவேந்தர் சஸ்பெண்ட் கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து ஆக., 31ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



இந்தியா





ஆக., 1: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் இருவர் பலி.





* எல்லைப் பாதுகாப்புப்படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக ராமன் ஸ்ரீவத்சவா டில்லி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.





* புதிய செயலர்: வெளியுறவுத்துறை செயலராக இருந்த சிவசங்கர் மேனன் ஓய்வு பெற்றதை தொடந்து கடந்த ஆக. 1ல், புதிய செயலராக நிருபமா ராவ் பொறுப்பேற்றார். சோகிலா அய்யருக்கு பின் பொறுப் பேற்றுள்ள இரண்டாவது பெண் இவர். மும்பை தாக்குதல், இந்தியா-பாக்., கூட்டறிக்கை போன்ற நெருக்கடியான சூழலில் நிருபமா ராவ் பதவியேற்றார். ஐ.எப்.எஸ்., அதிகாரியான நிருபமா ராவ் இதற்கு முன் சீனாவுக்கான இந்திய தூதராக பதவி வகித்தவர்.



ஆக்., 5: செல்வராசா கைது: பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர், செல்வராசா பத்மநாபன். இவர் ஆக. 5ல் ,தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





ஆக., 6: முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா உத்தரகண்ட் மாநில கவர்னராக பதவியேற்றார்.



* மும்பை இரட்டை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அஷ்ரத் அன்சாரி, ஹனீப் சயீது அவரது மனைவி பாமிடா ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து 'பொடா' கோர்ட் தீர்ப்பளித்தது.





ஆக., 10: உத்தரகண்டில் லாக், ஜாக்லா கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 23 பேர் பலி.

ஆக., 15: அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நெவார்க் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டார்.





ஆக., 19: ஜஸ்வந்த் நீக்கம்: பா.ஜ., மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் 'ஜின்னா, இந்தியா, பிரிவினை- சுதந்திரம்' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார். பிரிவினைக்கு காரணமான ஜின்னாவை புகழ்ந்து இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். நேருவையும், சர்தார் பட்டேலையும் விமர்சிக்கும் வகையிலும் இந்த புத்தகத்தில் எழுதி இருந்தார். இதனால் கட்சிக்குள் பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து ஆக. 19ல், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.



ஆக., 21: முத்தூட் அதிபர் மகன் பால் ஜார்ஜ் மர்ம நபர்களால் படுகொலை.





ஆக., 23: நாட்டிலேயே முதல்முறையாக பஞ்சாப், அரியானா ஐகோர்ட் நீதிபதி கண்ணன், தனது சொத்து விபரங்களை வெளியிட்டார்.



ஆக., 24: அத்வானியின் ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி பா.ஜ.,வில் இருந்து விலகினார்.





* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்கள் நடத்திய 'பந்த்'தில் ரயில் தண்டவாளத்தையும், மொபைல்போன் கோபுரத்தையும் வெடிவைத்து தகர்த்தனர்.





ஆக., 29: பாப் உலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்சன்: பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு. இவர் 1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தார் .1993ல் ஒரு பேட்டியில் தனது சிறு வயதில் அவர் தந்தை தன்னை தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது, சுவரில் மோத செய்வது உள்ளிட்ட சித்ரவதைகளை தெரிவித்திருந்தார். 11 வயதிலேயே அவரது சகோதரர்களுடன் இணைந்து 'தி ஜாக்சன் 5' இசை நிகழ்ச்சி நடத்தினார். 'ஐ வான்ட் யூ பேக்' எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது. 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் 'காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் 'ஆப் தி வால்' எனும் 'டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் 'திரில்லர்' ஆல்பம், 1987ல் 'பேட்' , 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன. 1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது,ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ராணுவ உடை போன்ற உடைகளையே அவர் மேடையில் விரும்பி அணிவார். 20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கிய இவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார். 2003ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2005ல், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிளாஸ்டிக் சர்ஜரி , போதை ஆகியன அவரது வீழ்ச்சிக்கு காரணங்கள் ஆகும். அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் ஜூன் 25ல், மாரடைப்பால் இறந்தார்.



ஆக., 31: சேவைக்கு விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த சமூக சேவகரான தீப் ஜோஷிக்கு ஆக. 31ல், வழங்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் சமூக தலைமை பிரிவில் இந்த விருதை பெற்றார். பிலிப்பைன்சில் நடைபெற்ற விழாவில், இவருடன் சீனா மற்றும் தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.





உலகம்



ஆக., 5: பாகிஸ்தானின் தெற்கு வசீர்ஸ்தான் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், தலிபான் தலைவர் மெக்சூத் பைதுல்லா அவரது மனைவி, மற்றும் அவரது மாமனார் ஆகியோர் பலியாயினர்.





ஆக., 9: அமெரிக்காவில் நியூஜெர்சிக்கும், மன்ஹட்டன் பகுதிக்கும் இடைப்பட்ட ஹோபோக்கன் என்ற இடத்தில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலி.



* செல்வராசா பத்மநாதன் கைதுக்கு பின், விடுதலைப் புலிகளின் சர்வதேச 'நெட்ஒர்க்' முற்றிலும் அழிந்து விட்டது என, இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபயா ராஜபக்ஷே கூறினார்.



ஆக., 10: தனது ஆட்சி காலத்தில் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது தொடர்பாக பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் மீது வழக்கு பதிவு.





ஆக., 20: ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடந்தது. 50 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது.

ஆக., 23: பிரபஞ்ச பேரழகி: இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி ஆக. 23ம் தேதி பகாமாசின் நசாவ் நகரில் நடைபெற்றது. இதில் வெனிசுலா நாட்டை சேர்ந்த ஸ்டெபானியா பெர்னாண்டஸ் அழகி பட்டத்தை கைப்பற்றினார்.





விளையாட்டு



ஆக. 8: ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் வென்று இந்திய அணி முதலிடம் பிடித்தது. ஆக. 13: ஆசியன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் காதே 4 தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.





ஆக. 16: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.





ஆக. 17: மின்னல் வேக வீரர்: பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் 100 மீ., தூரம் ஓட்டத்தில் பங்கேற்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், பந்தய தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் தனது முந்தைய பீஜிங் ஓலிம்பிக் சாதனையை (9.69 வினாடி) முறியடித்தார். தவிர, இதே பெர்லின் தொடரில் நடந்த 200 மீ., தூரத்தை 19.19 வினாடிகளில் கடந்து மற்றொரு உலக சாதனை (ஆக.20) படைத்து, 'மின்னல் வீரர்' என்பதை மீண்டும் நிரூபித்தார்.





ஆக. 18: வங்கதேச அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என வென்றது.

ஆக. 23: வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கைப்பற்றியது.





ஆக., 29: தடகள ராணி: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் 'வெல்ட்கிளாசி கோல்டன் தடகள லீக்' போட்டி நடந்தது. இதில் 'போல்வால்ட்' பிரிவில் ரஷ்யாவின் இசின்பெயவா (27), 5.06 செ.மீ., உயரம் தாண்டி, தனது முந்தைய சாதனையை (5.05 செ.மீ) முறியடித்து, வரலாறு படைத்தார். இதற்கு முன்னதாக ஏதென்ஸ் (2004) மற்றும் பீஜிங்கில் (2008) நடந்த ஒலிம்பிக் போட்டியில் 'போல்வால்ட்' பிரிவில் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஆக. 30: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி, 2-0 என்ற கணக்கில் வென்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us