sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

சினிமா 2020

/

சினிமா 2020

சினிமா 2020

சினிமா 2020


PUBLISHED ON : டிச 31, 2020

Google News

PUBLISHED ON : டிச 31, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆன்லைன்' ஆதிக்கம் - க/பெ.ரணசிங்கம்

கொரோனாவால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்பட்டது. தியேட்டரில் வெளியான படங்களின் எண்ணிக்கை குறைந்தது. கொரோனாவுக்கு முன் 48 படங்கள் வெளியானது. அதன் பின் நவம்பரில் தியேட்டர் திறந்தாலும் 30க்கும் குறைவான படங்களே வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள். தியேட்டரில் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டதால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.

* தியேட்டரில் வெளியான படங்களில், தர்பார், பட்டாஸ், சைக்கோ, டகால்டி, ஓ மை கடவுளே, நான் சிரித்தால், திரவுபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தாராளபிரபு, இரண்டாம் குத்து படங்கள் வரவேற்பை பெற்றன.

* கொரோனா தாக்கத்தால் ஆன்லைனில் சினிமா வெளியீடு சாத்தியமானது. ஆன்லைன் தளத்தில் சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், பெண்குயின், க/பெ.ரணசிங்கம், மூக்குத்தி அம்மன், அந்தக்காரம், ஒருபக்க கதை வரவேற்பை பெற்றன. 'ஆந்தாலஜி எனப்படும் ஒரே படத்தில் பல கதைகள் கொண்ட படமும் ஆன்லைனில் அதிகம் வெளியானது. இதில், இயக்குனர்களான வெற்றிமாறன், சுதாகொங்கரா, விக்னேஷ்சிவன், கவுதம்வாசுதேவ்மேனன் இயக்கிய படங்களும் வெளியாகின.

திருமணம்

நடிகை காஜல் அகர்வால்- காதலர் கவுதமை அக்டோபரில் மணமுடித்தார். நடிகர் மஹத்- மாடலிங் பிராச்சி மிஸ்ராவை மணமுடித்தார். காமெடி நடிகர் யோகிபாபு- மஞ்சு பார்க்கவியை திருமணம் செய்தார். நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்தார் அது சர்ச்சையாகி, ஆண்டு இறுதியில் அவரையும் பிரிந்தார்.

* பாகுபலி புகழ் ராணா, மிஹகா பஜாஜையும், பிக்பாஸ் புகழ் ஆரவ், நடிகை ராஹிவையும் நடிகை மியா ஜார்ஜ், தொழிலதிபர் பிலிப்பையும் கரம் பிடித்தனர்.

அதிக படங்கள்

நடிகர்களில் ஜீவா (ஜிப்ஸி, சீறு), சந்தானம் (டகால்டி, பிஸ்கோத்), விக்ரம்பிரபு (வானம் கொட்டட்டும், அசுரகுரு) அதிகபட்சமாக இரண்டு படங்களில் நடித்தனர்.

நடிகையரில் வரலட்சுமி சரத்குமார் (வெல்வெட் நகரம், கன்னிராசி, டேனி), நயன்தாரா (தர்பார், மூக்குத்தி அம்மன்) அதிக படங்களில் நடித்தனர்.

பிரச்னை

தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் முடிந்து புதிய நிர்வாகம் பதவியேற்றது. இத்தேர்தல் முறையாக நடக்கவில்லை எனக்கூறி டி.ராஜேந்தர் புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்து தலைவராகி, விலகினார்.

மறைவு

பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு 2020ம் ஆண்டின் பெரிய இழப்பானது. கொரோனாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், உடல்நலம் குன்றி செப்.25ல் மறைந்தார்.

* நடிகை நாஞ்சில் நளினி, இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணசாமி, நடிகர் டி.எஸ்.ராகவேந்தர், நடிகரும், இயக்குனருமான விசு, நடிகரும், மருத்துவருமான சேதுராமன், நாட்டுப்புறபாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா, நடிகர் தவசி, ஈரோடு சவுந்தர் மரணம் அடைந்தனர்.,

* சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி, சின்னத்திரை நடிகை சித்ரா மறைவும் பெரிய இழப்பு.

* ஹிந்தி மூத்த நடிகர் ரிஷிகபூர், இர்பான்கான் மறைவு பெரும் சோகம். மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை.






      Dinamalar
      Follow us