sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2022 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

/

2022 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2022 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2022 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஏப்.2: சொத்துவரியை 25 - 100 சதவீதம் தமிழக அரசு உயர்த்தியது.

ஏப்.3: கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கியது.

ஏப்.4: மதுரை 'எய்ம்ஸ்' கல்லுாரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக வகுப்பு துவக்கம்.

குமரனை கும்பிட்டு...: ஏப்.6: சேலம் புத்திர கவுண்டன்பாளையத்தில் 146 அடி முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இது உலகின் உயரமான முருகன் சிலை.

ஏப்.8: மக்கள் நலப்பணியாளர் 12 ஆயிரம் பேருக்கு மீண்டும் பணி வழங்க அரசு முடிவு.

*வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கும்போது மழைநீர் வடிகால் வசதி கட்டாயம் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

ஏப்.14: அம்பேத்கர் பிறந்த நாள் (ஏப். 14), சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படும் என அரசு அறிவிப்பு.

*கவர்னர் ரவியின் புத்தாண்டு தேநீர் விருந்தை தி.மு.க., கூட்டணி புறக்கணிப்பு. அதி.மு.க., பா.ஜ., பங்கேற்பு.

ஏப்.25: பல்கலை. துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்.

தேர் சோகம்: ஏப்.27: தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் 'அப்பர்' சுவாமியின் தேர், மின் கம்பியில் உரசியதில் 11 பேர் பலி.

இந்தியா

ஏப்.1: ராஜ்யசபாவில் 32 ஆண்டுக்குப்பின் பா.ஜ., எம்.பி.,க்களின் பலம் 101 ஆனது.

ஏப்.2: டில்லியில் தி.மு.க., அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

*டில்லியில் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதுார் டியூபா சந்திப்பு. இரு நாடுகள் இடையே முதல் அகல ரயில் சேவை துவக்கம்.

*இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.

ஏப்.15: கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா.

ஏப்.20: மத்திய தலைமை அறிவியல் ஆலோசகராக அஜய் குமார் நியமனம்.

பாரம்பரிய மருத்துவம்: ஏப்.20: குஜராத்தில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி (ஆயுஷ்) மருத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் (வலது), மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகன்னாத் பங்கேற்பு.

ஏப்.21: டில்லியில் சீக்கிய குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த தின சிறப்பு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஏப்.22: ம.பி., தலைநகர் போபாலில் 48வது இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு நடந்தது.

*டில்லியில் பிரதமர் மோடி - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு.

எண்ணம்... மூவர்ணம்...: ஏப்.23 : பீஹாரின் ஜகதிஷ்புரில் ஒரே நேரத்தில் 77,700 பேர் தேசியக்கொடியை அசைத்து கின்னஸ் சாதனை.

ஏப்.24: 'மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்டாதன்' அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடிக்கு முதலாவது 'லதா மங்கேஷ்கர்' விருது வழங்கப்பட்டது.

ஏப்.25: ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் (2021) இந்தியாவுக்கு (ரூ.5.86 லட்சம் கோடி) மூன்றாவது இடம். முதலிரண்டு இடத்தை அமெரிக்கா (ரூ.61 லட்சம் கோடி), சீனா (ரூ.22 லட்சம் கோடி) பெற்றன.

ஏப்.27: தேசிய எஸ்.சி., ஆணைய தலைவராக விஜய் சம்ப்ளா பதவியேற்பு.

ஏப்.30: இந்திய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்பு.

உலகம்

ஏப்.1: ரஷ்ய வெளியுறவுஅமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருகை.

ஏப்.2: பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.

ஏப்.3: ஹங்கேரி பிரதமராக விக்டர் ஆர்பன் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு.

*பாகிஸ்தான் பார்லி., கலைப்பு.

ஏப்.7: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்.

புதுமை பெண்: ஏப்.8: அமெரிக்க உச்சநீதிமன்ற முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்பு.

ஏப்.14: நைஜீரியாவின் சொக்கோட்டா மாகாணத்தில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி.

ஏப்.19: ஆப்கன் தலைநகர் காபூல் பள்ளியில் குண்டுவெடித்து 20 பேர் பலி.

ஏப்.20: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தி சேதி நியமனம்.

ஏப்.21: உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியது.

*பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா வருகை.

ஏப்.22: ஐவரிகோஸ்ட் அதிபராக பாட்ரிக் மீண்டும் தேர்வு.

ஏப்.24: பிரான்சில் தொடர்ந்து 2வது முறை அதிபரானார் இமானுவேல் மேக்ரான்.

ஏப்.25: உலகின் வயதான ஜப்பான் பெண் கேன் தனகா 119, காலமானார்.

பனியில் பரவசம்: ஏப்.25: பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி துாரம் நீச்சல் அடித்து தென் ஆப்ரிக்காவின் அம்பெர் பிலாரி கின்னஸ் சாதனை.

டாப் 4

ஏப்.7: மருத்துவப்படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஏப்.11: பாக்., பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 70, பதவியேற்பு.

ஏப்.24: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி.

ஏப்.27: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலாவல் புட்டோ சர்தாரி பதவியேற்பு.






      Dinamalar
      Follow us