PUBLISHED ON : ஜன 01, 2026

தமிழகம்
டிச.1: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
டிச.5: மதுரை - தொண்டி சாலையில் மேலமடை சந்திப்பில் ரூ. 150 கோடியில் 'வேலுநாச்சியார்' மேம்பாலம் திறப்பு.
டிச.17: மதுரை ரயில் நிலையம் அருகே எல்.ஐ.சி., கட்டடத்தில் தீ. மேனேஜர் கல்யாணி பலி.
டிச.18: திருப்பரங்குன்றம் தீபத்துாணில், தீபம் ஏற்றாத விரக்தியில் மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை.
டிச.19: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. 97.38 லட்சம் வாக்காளர் நீக்கம். 5 கோடியே, 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர்.
டிச.26: திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு எடுத்துச்செல்ல முயன்ற கேரள முஸ்லிம் குடும்பத்தினரை போலீசார் திருப்பி அனுப்பினர்.
டிச.27: ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு துவக்கியது.
இந்தியா
டிச.2: உ.பி., வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடந்தது.
டிச.4: இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதம் இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு.
டிச.6: நாக்பூர் பல்கலையில் 102 ஆண்டுகளில் முதன்முறை யாக பெண் துணைவேந்தர் மணாலி ஷிர்சாகர் பதவியேற்பு.
* உள்நாட்டு விமான பயணத்துக்கு ரூ. 7500 - ரூ. 18 ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு.
டிச.7: கோவாவில் பாகா கடற்கரை பகுதியில் உள்ள இரவு விடுதியில் தீ விபத்து. 25 பேர் பலி. விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா கைது.
டிச.9: சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டு வர வலியுறுத்தி 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் 120 பேர் சேர்ந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தனர்.
டிச.14: புதுச்சேரியில் 'லட்சிய ஜனநாயக கட்சியை' துவக்கினார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்.
* அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 24வது இடம்.
டிச.15: தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலை திறப்பு.
* ஜோர்டான், எத்தியோப் பியா, ஓமனுக்கு பிரதமர் மோடி பயணம்.
டிச.21: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வந்த 'வளர்ந்த இந்தியா ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.
* தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 2024 - 25ல் பா.ஜ., ரூ. 3112 கோடி, காங்., 299 கோடி, மற்ற கட்சிகள் ரூ. 400 கோடி பெற்றன.
* மகாராஷ்டிராவில் 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து என மொத்தம் 288 உள்ளாட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., கூட்டணி 212ல் வெற்றி, காங்., கூட்டணி 48ல் வெற்றி.
டிச.25: நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் திறன் பெற்ற 'கே - 4' ஏவுகணையை கப்பல்படை சோதித்தது.
* இந்தியாவில் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது (நவ. 30, 2025ன் படி). அமெரிக்கா (1.50 லட்சம்), சீனா (1.20 லட்சம்) முதல் இரண்டு இடத்தில் உள்ளன.
டிச.26: ரயில் கட்டணம் உயர்வு அமல்.
டிச.27: டில்லியில் ரூ. 5க்கு மதிய, இரவு உணவு வழங்கும் 'அடல்' திட்டம் துவக்கம்.
உலகம்
டிச.5: பாக்., முப்படை தலைமை தளபதியாக, அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் நியமனம்.
டிச.10: உலகில் முதல் நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிப்பு.
டிச.14: பா.ஜ., தேசிய செயல் தலைவராக பீஹார் அமைச்சர் நிதின் நபின் 45, பதவியேற்பு.
டிச.15: ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் பயங்கர வாத தாக்குதல். 15 பேர் பலி.
டிச.21: வங்கதேசத்தில் வெறுப்பு கருத்துகள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் 27, ஒரு கும்பலால் அடித்துக்கொலை.
டிச.26: மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
டிச.27: உலகில் அதிவேகத்தில் செல்லும் (புறப்பட்ட 2 வினாடியில் மணிக்கு 700 கி.மீ.,) ரயிலை இயக்கி சீனா சாதனை.
* தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம் அமல்.
டிச. 31: இந்தியா - பாக்., இடையே போரை நிறுத்தம் செய்ய உதவியதாக அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் கருத்து. இதில் மூன்றாம் நாடு தலையீடு இல்லையென மத்திய அரசு திட்டவட்டம்.
பொருநை நம் பெருமை
டிச.20: தாமிரபரணி கரை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை காட்சிப்படுத்தும் பொருநை அருங்காட்சியகம் 13 ஏக்கர் பரப்பளவில் திருநெல்வேலியில் திறப்பு.
'மெகா' ஹோட்டல்
டிச.6: உலகின் உயரமான ஹோட்டல் (1237 அடி) துபாயில் திறப்பு. 82 தளம், 1004 அறைகள் உள்ளன.
நீளமான கண்ணாடி பாலம்
டிச.3 : இந்தியாவின் நீளமான (180 அடி) 'ஸ்கைவாக்' கண்ணாடி நடைபாலம், ஆந்திரா விசாகபட்டினத்தில் திறப்பு. கடல்நீர் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பறக்காததால் பாதிப்பு
டிச.5: விமானிகள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட 'இண்டிகோ' விமானங்கள் ரத்து. ஆயிரக்கணக்கான பயணிகள் விமானநிலையத்தில் தவிப்பு.
டாப் 4
* டிச. 5: டில்லியில் இந்திய - ரஷ்ய தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்பு.
* டிச. -11: ஒடிசா எம்.எல்.ஏ.,க்கள் மாத சம்பளம் ரூ. 1.11 லட்சத்தில் இருந்து ரூ. 3.45 லட்சமாக உயர்வு.
* டிச. 13: கேரள உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியான காங்., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி. முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பா.ஜ., சாதனை.
* டிச. 16: 'ரேடியோ சிலோன்' என அறியப்பட்ட இலங்கை வானொலி சேவை நுாற்றாண்டை நிறைவு செய்தது.

