sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

ஜனவரி

/

ஜனவரி

ஜனவரி

ஜனவரி


PUBLISHED ON : டிச 31, 2020

Google News

PUBLISHED ON : டிச 31, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜன., 1: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் கைது.

ஜன., 3: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் தி.மு.க., 247, அ.தி.மு.க., 213 இடங்களில் வெற்றி.

* ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க., 2110, அ.தி.மு.க., 1797 இடங்களில் வெற்றி.

ஜன., 4: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்.

ஜன., 8: கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொலை.

ஜன., 10: மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலில் அ.தி.முக., 13, தி.மு.க., 12ல் வெற்றி.

ஜன., 17: பெங்களூருவில் எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் கைது.

ஜன., 23: மதுரை - உசிலம்பட்டி இடையே 10 ஆண்டுகளுக்குப்பின் ரயில் சோதனை ஓட்டம்.

ஜன., 24: குரூப் - 4 தேர்வில் முறைகேடில் ஈடுபட்ட 99 பேருக்கு ஆயுள் முழுவதும் தேர்வு எழுத தடை.

* குரூப் - 4 தேர்வில் முறைகேடில் ஈடுபட்ட தேர்வாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள் 13 பேர் கைது.

இந்தியா

ஜன., 1: ஏ.சி., ரயில்களில் கி.மீ., க்கு ரூ. 4, ஏ.சி., இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் கி.மீ.,க்கு ரூ. 2 கட்டண உயர்வு

ஜன., 2: நாட்டில் முதன்முறையாக டில்லி மெட்ரோ ரயிலில் 'வை-பை' வசதி அறிமுகம்.

ஜன., 3: பெங்களூருவில் 107வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடந்தது.

ஜன., 10: குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

ஜன., 12: 150வது ஆண்டை முன்னிட்டு கோல்கட்டா துறை முகத்துக்கு ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டினர்.

ஜன., 21: இந்தியா - நேபாள எல்லையில் 2வது சோதனைச்சாவடி திறப்பு.

* ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல்.

ஜன., 22: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.

ஜன., 26: குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக சி.ஆர்.பி.எப்., மகளிர் படையினர் பங்கேற்பு.

ஜன., 27: ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றம்.

ஜன., 29: மும்பையில் பஸ் - ஆட்டோ மோதிய விபத்தில் 26 பேர் பலி.

* கருக்கலைப்புக்கான கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்.

உலகம்

ஜன., 7: டிரைவர் இல்லாத புல்லட் ரயில் சோதனை ஓட்டம் சீனாவில் நடந்தது.

ஜன., 8: ஈராக்கில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.

ஜன., 9: நைஜீரியாவில் ஐ.எஸ்., நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள், 77 பயங்கரவாதிகள் பலி.

ஜன., 11: தைவான் அதிபராக சாய் இங் - வென் தேர்வு.

ஜன., 13: பாக்., முன்னாள் அதிபர் முஷராப்புக்கு மரண தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜன., 16: ரஷ்ய பிரதமராக மிக்கெய்ல் மிஷுஸ்டின் பொறுப்பேற்பு.

ஜன., 22: கிரீசின் முதல் பெண் அதிபராக ஏகதெரினி சகெல்ரோபவுலு தேர்வு.

இதுதான் 'டாப்'

* ஜன., 8: ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தை தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியதில் 176 பேர் பலி.

* ஜன., 20: தஞ்சை விமானப்படை தளத்தில், பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கிச் செல்லும் 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள் சேர்ப்பு.

* ஜன., 29: இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியீடு.

விதிமீறினால்...

ஜன., 11: கேரளாவின் கொச்சியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெடிவைத்து தகர்ப்பு.

புதிய தலைமை

ஜன., 20: பா.ஜ., தலைவராக ஜே.பி.நட்டா 59, பொறுப்பேற்பு. பீஹாரில் 1960ல் பிறந்தார். ஹிமாச்சல் அரசில் இரண்டுமுறை அமைச்சராகவும், 2014 - 19 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

விலகியது பிரிட்டன்

ஜன., 31: பிரிட்டன் பார்லிமென்டில் நிறைவேறிய 'பிரக்சிட்' ஒப்பந்தப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகியது. எந்த நாட்டுடனும் வர்த்தகத்தை பிரிட்டனே மேற்கொள்ளும்.

பாக்தாத் தாக்குதல்

ஜன., 3: ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்த ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானமான 'எம்.கியூ., - 9' மூலம் கொல்லப்பட்டார்.

கடல் காவலன்

ஜன., 11: அரபிக்கடலில் ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா போர் கப்பலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் தரையிறக்கி சோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us