sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

ஜூலை

/

ஜூலை

ஜூலை

ஜூலை


PUBLISHED ON : ஜன 01, 2022

Google News

PUBLISHED ON : ஜன 01, 2022


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜூலை 2: சட்டசபை தேர்தலுக்கு ரூ. 666.43 கோடி செலவு என தமிழக தேர்தல் ஆணையம் தகவல்.

ஜூலை 7: தமிழகத்தின் எல்.முருகன் மத்திய மீன் வள இணையமைச்சராக பதவியேற்பு.

புதிய தலைவர்: ஜூலை 8: தமிழக பா.ஜ., தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை

நியமனம்.

ஜூலை 12: அரசியலுக்கான மக்கள் மன்றத்தை கலைத்தார் நடிகர் ரஜினி.

ஜூலை 28: 'தகைசால் தமிழர்' விருது தொகை ரூ. 10 லட்சத்தை கொரோனா நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா வழங்கினார்.

ஜூலை 31: போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க உத்தரவு.

இந்தியா

ஜூலை 2: கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி.

ஜூலை 2: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (லோக் தளம்) விடுதலை.

ஜூலை 5: மஹாராஷ்டிரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஓராண்டு சஸ்பெண்ட்.

ஜூலை 7: மத்திய அமைச்சரவையில் மாற்றம். 12 பேர் ராஜினாமா. புதிதாக 36 பேர் பதவி ஏற்பு. அமைச்சர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்வு.

ஜூலை 10: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார் சிட்டி நியமனம்.

ஜூலை 11: கர்நாடகா கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்பு.

ஜூலை 12: உ.பி., ம.பி., ராஜஸ்தானில் கனமழைக்கு 71 பேர் பலி.

ஜூலை 14: நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் யூனியன் பிரதேசமானது லடாக்.

ஜூலை 14: இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் பாட்னாவில் துவக்கம்.

ஜூலை 15: மணிப்பூரில் முதல் முறையாக பயணிகள் ரயில் சேவை(அசாமின் சில்சார் - மணிப்பூரின் வைன்கைசுன் பாவோ) துவக்கம்.

ஜூலை 16: 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் 42, ஆப்கன் போர்க்களத்தில் பலி.

ஜூலை 18: பஞ்சாப் காங்., தலைவராக சித்து நியமனம்.

* இந்தியாவில் முதல் முறையாக ஐகோர்ட் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி குஜராத்தில் துவக்கம்.

ஜூலை 19: டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.

ஜூலை 19: இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் 300 இந்தியர்களின் அலைபேசி உரையாடல் கண்காணிக்கப்பட்டதாக புகார்.

வேகமான ரயில்: ஜூலை 20: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயில் சீனாவில் அறிமுகம்.

ஜூலை 23: மஹாராஷ்டிரா வில் வெள்ளம், நிலச்சரிவில் 138 பேர் பலி.

ஈஸ்வரா...ருத்ரேஸ்வரா: ஜூலை 25: ஐ.நா., உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் தெலுங்கானாவில் 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ருத்ரேஸ்வரர் கோயில் சேர்ப்பு.

ஜூலை 26: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா.

பொம்மை பெருமை: ஐ.நா., அங்கீகாரம்: ஜூலை 27: ஐ.நா., உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த குஜராத்தின் தோலவிரா நகரம் சேர்ப்பு.

ஜூலை 28: கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை (பா.ஜ.,) பதவியேற்பு. இவர் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன்.

ஜூலை 28: உ.பி.,யின் லக்னோவில் பஸ்--லாரி மோதியதில் 18 தொழிலாளர் பலி.

ஜூலை 29: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு.

* இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகாவில் அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு அமல்.

உலகம்

ஜூலை 1: கனடாவில் அனல் காற்றுக்கு ஒரு வாரத்தில் 165 பேர் பலி.

ஜூலை 2: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷலினா, மிச்சிகன் மாகாண நீதிபதியாக நியமனம்.

ஜூலை 4: பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 50 வீரர்கள் பலி.

ஜூலை 6: அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஜாஸ் பதவி விலகல்.

* ரஷ்யாவில் பயணிகள் விமான விபத்தில் 28 பேர் பலி.

ஜூலை 7: ஹைதி அதிபர் ஜேவனல் மோயிஸ் சுட்டுக்கொலை.

ஜூலை 9: டென்மார்க்கில் அமைத்த உலகின் உயரமான (69.4 அடி) மணல் சிற்பம் 'கின்னஸ் சாதனை' புத்தகத்தில் இடம் பெற்றது.

ஜூலை 10: வங்கதேச தலைநகர் தாகாவில் ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி.

* இந்தியாவுக்கான அமெ ரிக்க துாதராக எரிக் மைக்கேல் கார்சிட்டி நியமனம்.

ஜூலை 13: ஈராக்கில் கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் 92 பேர் பலி.

ஜூலை 13: நேபாள பிரதமராக ஷேர் பகதுார் துபா பதவியேற்பு.

ஜூலை 17: ஜெர்மனியில் கனமழைக்கு 120 பேர் பலி.

ஜூலை 22: ஹைதி பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்பு.

ஜூலை 23: சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன் முறையாக திபெத் சென்றார்.

ஜூலை 26: துனிசிய பார்லிமென்ட் கலைப்பு. பிரதமர் மெசிசி பதவி நீக்கம்.

ஜூலை 28: லெபனான் பிரதமராக நஜிப் மிகாதி தேர்வு.

ஜூலை 28: பெரு அதிபராக பெட்ரோ காஸ்டில்லோ பதவியேற்பு.

டாப் - 4

* ஜூலை 1: விமானப்படை துணை தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமனம்.

* ஜூலை 3: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக அதுல் கேஷப் பதவியேற்பு.

* ஜூலை 4: உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி (பா.ஜ.,) பதவியேற்பு.

* ஜூலை 13 : நேபாள பிரதமராக ஷேர் பகதுார் துபா 75, பதவியேற்பு.






      Dinamalar
      Follow us