தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/நவம்பர்

நவம்பர்

நவம்பர்


PUBLISHED ON : ஆக 21, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்



நவ., 2: நீதிபதிகளின் சொத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் உட்பட 20 நீதிபதிகள் நவ.2ம் தேதி தங்களுடைய சொத்து விபரங்களை வெளியிட்டனர்.





நவ. 3: புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.



நவ. 4: கள்ளக் காதலுக்காக பள்ளி மாணவிக்கு எய்ட்ஸ் ஊசி போட முயன்ற திருவெறும்பூர் அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ராஜகுமாரி கைது.





நவ., 8: நீலகிரி சோகம்: நீலகிரியில் நவ.8ல் இருந்து பெய்த தொடர் மழையின் காரணமாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 45க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 800க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நிலச்சரிவால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட தேயிலை மற்றும் காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நெஞ்சை உருக்கிய இந்நிலச்சரிவால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



நவ. 9: தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., கட்சியின் ராஜ்யசபா எம்.பி., திருநாவுக்கரசர் காங்கிரசில் இணைந்தார்.





* சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 14 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு.

நவ.14: முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து, ம.தி.மு.க., பொதுச் செயலாளார் வைகோ தலைமையில் மதுரையில் உண்ணாவிரதம்.





நவ. 15: சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் இருந்து, 16 ஆண்டுக்கு பின் விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டது.





நவ.19: நெல்லை பல்கலையில் ஞானவாணி எப்.எம்.ரேடியோவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கினார்.





* செங்கல்பட்டு அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட ஐந்து பேர் பலியாயினர், 6 பேர் காயம்.

நவ. 23: வாகன விதிகளுக்கு முரணாக பஸ்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.





நவ.30: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவு.





இந்தியா





நவ. 1: உ.பி., கோண்டா அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி மீது ரயில் மோதியதில் 11 பேர் பலி





நவ. 3: சண்டிகரில் பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகளையடுத்து, மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வாகனம் திருப்பி விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதத்தால் சிறுநீரக நோயாளி வர்மா பலி.





நவ. 5: கேரளாவின் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் 8 மாணவர்கள் பலி.





* இமாச்சல் பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தில் பானர் ஆற்றில் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 25 பேர் பலி.





நவ.6: பதவி தப்பியது: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை மாற்றக்கோரி கருணாகர ரெட்டி , ஜனார்த்தன ரெட்டி ஆகிய அமைச்சர்கள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் போர்க்கொடி தூக்கினர். நவ.6ம் தேதி ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாக 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனால் எடியூரப்பா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின் பா.ஜ., மேலிடம் தலையிட்டு பிரச்னையை தீர்த்தது. இது தற்காலிக தீர்வு என்பதால் எடியூரப்பாவுக்கு தலைவலி தொடரும்.



நவ. 7: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் சவான் பதவி ஏற்பு.





நவ., 9: இந்தி எதிர்ப்பு: மகாராஷ்டிர சட்டசபையில் நவ.9ல் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். இதில் இந்தி மொழியில் பதவி ஏற்றதற்காக சமாஜ்வாடி எம்.எல்.ஏ., அபு ஆசிம் மீது, நவ நிர்மாண் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 4 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நவ. 13: சபரிமலை சன்னிதானத்தின் சுற்றுக் கோயில்களான கணபதி, நாகராஜா, மாளிகைப்புறம் சன்னதிகள் தங்கத்தால் மாற்றி அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம்.

நவ. 19 மத்திய அரசின் புதிய கரும்பு விலைக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லியில் கரும்பு விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்பாட்டம்.



நவ. 23: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யும் முன்பே பத்திரிகையில் வெளிவந்தது தொடர்பாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.





நவ.24: பாபர் மசூதி இடிப்பு தொடர் பாக 17 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த லிபரான் கமிஷன் அறிக்கை பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.





நவ., 25: சாதனை ஜனாதிபதி: இந்தியாவின் அதிவேக சுகோய் போர் விமானத்தில் பறந்து, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் சாதனை படைத்தார். உலகிலேயே போர் விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.





நவ.26: 2008ம் ஆண்டு இதே நாளில் நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தின் ஓராண்டு நிறைவு தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.இதில் தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரிகளுக்கும் , பொதுமக்களுக்கும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.





நவ.28: கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த ஆன்லைன் கேட் தேர்வு ரத்து.





நவ.29: ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் துவங்கினார்.



உலகம்



நவ. 2: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 34 பேர் பலி. நவ. 6: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட்ஹுட் ராணுவ மையத்தில் மேஜர் நிடாக் மாலிக் ஹசன் என்பவர் நுழைந்து 12 வீரர்களை சுட்டுக்கொன்றதால் பரபரப்பு.



நவ. 8: பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் குண்டுவெடித்து 11 பேர் பலி





நவ. 14: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் சுற்றுப்பயணம்.





நவ.19: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கோர்ட் வளாகத்தில் தற்கொலைப்படையைச் சேர்ந்தவன் தாக்குதல் நடத்தியதில், 18 பேர் பலி, 46 பேர் படுகாயம்.





* வங்கதேச தலைவர் முஜிபுர் ரஹ்மானை கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.





நவ.21: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 31 பேர் பலி.





நவ., 24: ஒபாமா விருந்து: அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், முதல்முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.24ல் வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு, அதிபர் ஒபாமா சிறப்பு விருந்து அளித்தார். இவ் விருந்தில் மன்மோகன் சிங் மனைவி, ஒபாமா மனைவி மற்றும் அமெரிக்க, இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.



நவ.28: ரஷ்யாவில் நெவ்ஸ்கி எக்ஸ்பிரஸ் மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள உக்லோவா கிராமத்திற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில 39 பேர் பலி.





விளையாட்டு





நவ. 3: காஷ்மீரில் விளையாட மறுத்த சர்வீசஸ் அணிக்கு ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தடை விதித்தது.





நவ. 4: மும்பையை சேர்ந்த 12 வயது மாணவர் சர்பராஸ் கான், பள்ளிகளுக்கு இடையிலான ஹாரிஸ் ஷீல்டு 3 நாள் கிரிக்கெட் போட்டியில் 439 ரன்கள் விளாசினார்.





நவ. 11: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை, 4-2 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது இந்திய அணி.





நவ. 16: 'மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தமானது' என்ற சச்சின் தெரிவித்த கருத்துக்கு, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம்.

நவ. 19: அயர்லாந்து அணிக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில், வெற்றியை எட்டிய பிரான்ஸ் உலககோப்பை கால்பந்து தொடருக்கு தேர்வு பெற்றது. இருப்பினும் இப்போட்டியில் பந்தை கையால் தட்டிய பிரான்ஸ் கேப்டன் தியரி ஹென்றி பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.





நவ. 21: அரசு தலையீடு காரணமாக ஈராக் கால்பந்து சங்கத்துக்கு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தடை விதித்தது.





நவ. 27 : இலங்கை அணிக்கு எதிராக கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெறும் 100 வது வெற்றியாக அமைந்தது.



நவ. 28 : டைகர் சர்ச்சை: உலகின் 'நம்பர்-1' கோல்ப் வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ், புளோரிடாவில் நடந்த கார்விபத்தில் காயம் அடைந்தார். இதனை அடுத்து பல பெண்களுடன் அவர் வைத்திருந்த தொடர்பு அம்பலமானது. இப்பிரச்னையில் அவரது மனைவி எலின் விவாகரத்து முடிவை எட்டினார். அடுக்கடுக்கான பிரச்னைகளில் சிக்கிய டைகர், போட்டிகளிலிருந்து காலவரையற்ற ஓய்வை அறிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us