sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

தொழில்

/

தொழில்

தொழில்

தொழில்


PUBLISHED ON : ஜன 01, 2022

Google News

PUBLISHED ON : ஜன 01, 2022


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன. 1: மிஸ்டுகால் (84549 55555) தருவதன் மூலம் இன்டேன் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யலாம்.

ஜன. 12: பயனாளிகளின் தனிப்பட்ட தகவலை பகிர மாட்டோம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவிப்பு.

ஜன. 29: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (2021-22) 11 சதவீதமாக இருக்கும் என தகவல்.

பிப். 1: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் (2021-2022) தாக்கல் செய்தார்.

ஏப். 2: 2021- 2022 நிதியாண்டில் அதிகபட்சமாக ஏப்ரலில் ரூ. 1.39 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல்.

மே 24: தமிழகத்தில் 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிக்கு வாடகையில்லா டிராக்டர் திட்டத்தை 'டபே' நிறுவனம் அறிமுகம்.

ஜூன் 8: இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு உதவ ரூ.3776 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்.

ஜூலை 14: 'மாஸ்டர்கார்டு' நிறுவனம் புதிய வாடிக்கையாளரை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை.

செப். 7: 'பிட்காயின்' மெய்நிகர் கரன்சியை அங்கீகரித்த முதல் நாடானது சல்வாடர்.

செப். 30: ஆதார் - பான் கார்டு எண் இணைப்பதற்கான கடைசி தேதி 2022 மார்ச் 31 ஆக நீடிப்பு.

செப். 30: அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் 'குளோபல் லீடர்ஷிப்' விருதுக்கு எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், 'டாபே' நிறுவன தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன் தேர்வு.

அக். 8: பணம் அனுப்பும் ஐ.எம்.பி.எஸ்., முறையில் நாள் ஒன்றுக்கான வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு.

அக். 27: இந்தியாவின் பெரிய பசுமை ைஹட்ரஜன் ஆலையை (10 மெகாவாட்) ம.பி.,யின் விஜய்பூரில் அமைக்க உள்ளதாக கெயில் நிறுவனம் அறிவிப்பு.

நவ. 12: ரிசர்வ் வங்கி மூலம் மத்திய, மாநில அரசின் கடன் பத்திரத்தில் மக்கள் முதலீடு செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்.

நவ. 12: கிழிந்த ரூபாய் நோட்டை எந்த வங்கியிலும் மாற்றலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

நவ. 25, ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜிேயா நிறுவனங்கள் கட்டணத்தை 20 - 25 சதவீதம் உயர்த்தின.

நவ. 30: மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் இந்தியாவின் முதல் கிரடிட் கார்டை எச்.எஸ்.பி.சி., வங்கி அறிமுகம் செய்தது.

டிச. 10: சிட்டி யூனியன் வங்கியின் தொடுதல் இல்லாத, 'கீ -செயின் டெபிட் கார்டு' சேவை அறிமுகம். ரூ. 5000 வரை ஓ.டி.பி., இல்லாமல் பணம் செலுத்த முடியும்.

டிச. 16 : இந்தியாவில் 'செமி கண்டக்டர்' உற்பத்தியை ஊக்குவிக்க ரூ. 76 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

டிச. 22: 'ஜன் தன் யோஜனா' வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 44 கோடியை தாண்டியது.






      Dinamalar
      Follow us