இரண்டு ஒன்றானது
டிச., 21 : சூரிய மண்டலத்தின் இரு பெரும் கோள்களான சனி, வியாழன் ஒரே நேர்கோட்டில் வந்தது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நிகழ்வு நடைபெறும். இதை 'கிரேட் கன்ஜங்ஷன்' என்று அழைக்கின்றனர். 1623 ஜூலை16க்குப் பின் 398 ஆண்டுகள் கழித்து இந்த வானியல் நிகழ்வு தோன்றியது. இனி 2080ல் தோன்றும்.
சாதனை சிறுமி
டிச., 5: அமெரிக்காவின் 'டைம்' இதழில் 2020ம் ஆண்டுக்கான (௧௫ வயதுக்குட்பட்ட) சிறந்த நபராக அமெரிக்க வாழ் இந்திய சிறுமி கீதாஞ்சலி தேர்வு. சுகாதாரமான குடிநீர், போதை பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கு மென்பொருள் கண்டுபிடித்தார்.
முதல் ராக்கெட்
நவ., 11: பி.எஸ்.எல்.வி., - சி 49 ராக்கெட், இந்தியாவின் இ.ஓ.எஸ்., 01 செயற்கைக்கோள் உட்பட ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் (அமெரிக்கா 4, லக்சம்பர்க் 4, லுாதியானா 1) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கொரோனாவுக்குப்பின் இஸ்ரோ அனுப்பிய முதல் ராக்கெட். 2020ல் இந்தியாவில் இருந்து ஏவிய முதல் ராக்கெட்.
நிலவில் கொடி
டிச., 2: இதுவரை எந்த விண்கலமும் செல்லாத நிலவின் பகுதியில் சீனாவின் ஷாங்கே - 5 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறை துகள் மாதிரியை சேகரித்து பூமியை வந்தடைந்தது. சீன தேசிய கொடியையும் நட்டது.
பூமியில் விண்கல்
டிச., 6: ஜப்பானில் 2014ல் 'ஹயாபுசா - 2' விண்கலம், 'ரியுகு' என்ற விண்கல்லை ஆய்வு செய்யப்பட்டது. 2020 நவம்பரில் விண்கல்லில் தரையிறங்கி பாறை, துகள் மாதிரியை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது. டிச., 6ல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது. இதன் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது குறித்து காரணத்தை கண்டறிய உள்ளனர்.
விண்வெளி பெண்
பிப்., 6 : சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரே பயணத்தில் அதிக நாட்கள் (328) பணி யாற்றிய வீராங்கனை ஆனார் நாசாவின் கிறிஸ்டினா கோச். இதற்கு முன் சக வீராங்கனை பெக்கி விட்சன் 289 நாட்கள் இருந்ததே அதிகம்.
மின்னல் வேக பயணம்
நவ., 9: .உலகில் 'ஹைபர்லுாப்' தொழில்நுட்பத்தில் முதல்முறையாக பயணிகளுடன் சோதனை ஓட்டத்தை விர்ஜின் என்ற நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது. அதன் நிர்வாகிகளே பயணம் மேற்கொண்டனர்.