தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/ஸ்பெஷல் கட்டுரை

ஸ்பெஷல் கட்டுரை

ஸ்பெஷல் கட்டுரை


PUBLISHED ON : ஜன 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

குகைக்குள் அதிசயம்



தாய்லாந்தில், சியாங் ராய் மாகாணத்தில், 10 கி.மீ., நீளமான இயற்கை சுரங்கம் உள்ளது. இது மிகக்குறுகலான அபாய வளைவுகளை கொண்டது. ஜூன் 23ல் குகைக்குள் கால்பந்து சிறுவர்கள் 12 பேர் பயிற்சியாளருடன் சென்றனர். அனைவரும் 11-- 16 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்கள் குகைக்குள் சென்ற சிறிது நேரத்துக்கு பின் கனமழை பெய்தது. குகைக்குள் தண்ணீர் புகுந்துவிட அனைவரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. மேடான பகுதியில் சிறுவர்களும், பயிற்சியாளரும் ஒதுங்கினர்.

உணவின்றி கடுங்குளிரில் பல நாட்களாக தவித்தனர். குழந்தைகளை காணாத பெற்றோர் தேடினர். அப்போது குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களை பார்த்ததும் சிறுவர்கள் சிக்கி உள்ளதை உணர்ந்தனர்.

சவாலான பணி

மழை தொடர்ந்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் மீட்பு படையினரும் உதவிக்கு வந்தனர். இதில் ஒருவர் உள்ளே சென்று சிறுவர்கள் தங்கியிருந்த பகுதியை கண்டுபிடித்தார். புகைப்படமும் எடுத்தார். மீட்பு பணி வேகமெடுத்தது. மீட்புப்பணியில் ஈடுபட்ட மற்றொரு தாய்லாந்து வீரர் குகைக்குள் போதிய ஆக்சிஜன் இன்றி உயிரிழந்தார்.

பின் ஜூலை 8ல் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்வு செய்யப்பட்டு குகைக்குள் அனுப்பப்பட்டனர். வெள்ளத்தில் நீந்திச் சென்று சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒதுங்கி இருந்த பகுதியை சென்றடைந்தனர். முதலில் 4 பேர் மீட்கப்பட்டனர். அடுத்தநாள் மீதி அனைவரும் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். காப்பாற்றுவது கடினம் என நினைத்த நேரத்தில் கடுமையாக போராடி மீட்ட வீரர்களுக்கு உலகளவில் பாராட்டு குவிந்தது.

இணைந்த 'இரு துருவங்கள்'



மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு ஜூன் 12ல் சிங்கப்பூரில் நடந்தது.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அமெரிக்கா - வடகொரியா இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த சூழலில் தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலையீட்டுக்கு பின் வடகொரியா பேச்சுவார்த்தை நடந்த முன் வந்தது. அமெரிக்க அதிபரை நேரடியாக சந்திக்க விரும்புவதாக வடகொரியா அறிவித்தது. இதற்கான தேதியை அமெரிக்கா அறிவித்தது. பின் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென்கொரியா-வடகொரியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் மீண்டும் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது.

இறுதியில் ஜூன் 12ல் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல்லா நட்சத்திர தீவில் சந்திப்பு நிகழ்ந்தது. கிம் ஜாங் உன் முதலில் வந்தார். ஏழு நிமிடங்கள் கழித்து டிரம்ப் வந்தார். இருவரும் முதன்முறையாக சந்தித்தனர். 12 வினாடிகள் இருவரும் கை குலுக்கினர். பேச்சுவார்த்தையின் போது இருவரின் மொழி பெயர்ப்பாளர்கள் தவிர யாரும் உடன் இல்லை.

சந்திப்புக்கு பின் பேசிய டிரம்ப், ''கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பதாகவும், ஒரு அணு ஆயுத சோதனை கூடத்தை மூடியுள்ளதாக கிம் ஜாங் உறுதியளித்தார்'' என்றார்.

கிம் ஜாங் பேசுகையில், ''இருநாடுகளிடையே கசப்பை மறந்து புதிய பயணத்துக்கு பாதை வகுத்துள்ளோம். பல சோதனைகள், தடைகளை தாண்டி வடகொரியா இந்த நிலையை அடைந்துள்ளது'' என்றார்.

திருப்பம் தந்த தீர்ப்புகள்



உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் திருப்பத்தை ஏற்படுத்தின.

சபரிமலை

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

ஆதார்

அரசியல் சாசனப்படி, ஆதார் செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு. மானியம் போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயம், அலைபேசி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை.

ஓரினச் சேர்க்கை

ஓரினச் சேர்க்கை குற்றம் எனக்கூறும் சட்டப்பிரிவு 377ஐ நீக்கி, உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு.

தகாத உறவு

திருமண வாழ்க்கையை மீறி மற்றொருவருடன் தகாத உறவை வைத்துக்கொள்வதை குற்றமாக பார்க்கும் 497வது சட்டப்பிரிவை நீக்கி தீர்ப்பு.

காதல் திருமணம்

ஜாதி மறுப்பு, காதல் திருமணம் செய்பவர்களின் மீதான தாக்குதலை தடுக்கக்கோரி ஷக்தி வாஹினி தொண்டு நிறுவன (டில்லி) வழக்கில், ''வயது வந்த ஆணும், பெண்ணும் அவரவர் விருப்பப்படி காதல் திருமணம் செய்ய முழு உரிமை உள்ளது. தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தீர்ப்பு.

நேரடி ஒளிபரப்பு

முக்கிய வழக்குகளை நேரடி ஒளிபரப்ப வேண்டும் என்ற வழக்கில், ''நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமையுண்டு.

முக்கிய வழக்கு விசாரணைகளை நேரலை செய்யலாம். இதனால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்'' என தீர்ப்பு.

பட்டாசு வெடிக்கலாமா

பட்டாசு வெடிப்பதற்கான விவகாரத்தில், ''தீபாவளி, பிற விழா காலங்களில் நாடு முழுவதும் இரவு 8 - 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டில் நள்ளிரவு 11:55 - 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம் என தீர்ப்பு.

அயோத்தி வழக்கு

அயோத்தி வழக்கில், ''1994ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. அயோத்தி வழக்கை, அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை'' என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் தீர்ப்பு.

தனிப்பட்ட விருப்பம்

தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்டால் இசைக்கலாம். அப்போது அதற்குரிய மரியாதை தர வேண்டும் என தீர்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us