sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்

/

2023 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்

2023 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்

2023 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜன. 8: சென்னையில் அரசுப்பள்ளி மாணவர்கள் 5000 பேர் யோகா செய்து உலக சாதனை.

ஜன.13: தமிழகத்தில் மின் வாகனங்களுக்கு 100 சதவீத வரி தள்ளுபடி.

ஜன.17: சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிய அலைபேசி ஆப்பரேட்டிங் சிஸ்டம் (பார்-ஒ.எஸ்) வெளியீடு.

ஜன.19: சிவகாசியில் இரு பட்டாசு ஆலை வெடி விபத்து. 3 பேர் பலி.

ஜன.23: அரக்கோணம் மண்டியம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் 4 பேர் பலி.

இந்தியா

ஜன.2: பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஜன.3: மஹாராஷ்டிராவின் நாக்பூரில் 108வது இந்திய அறிவியல் மாநாடு நடந்தது.

ஜன.6: இந்தியாவின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம் கேரளாவின் திருவனந்த

புரத்தில் திறப்பு.

ஜன.7: கேரளாவின் காசர் கோட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட கல்லுாரி மாணவி அனுஸ்ரீ பார்வதி 19, உயிரிழப்பு.

ஜன.13: உலகில் நீண்ட துாரம் நதியில் செல்லும் 'எம்.வி.கங்கா விலாஸ்' கப்பல் சேவை துவக்கம். 3200 கி.மீ பயணிக்கும் (வாரணாசி - திப்ருகர்).

ஜன.15: 75வது ராணுவ தினம் முதன்முறையாக டில்லிக்கு வெளியே பெங்களூருவில் கொண்டாடப்பட்டது.

ஜன.17: உலகின் உயரமான மார்பளவு ஆதி யோகி சிலை (112 அடி), கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டது.

ஜன.23: 'பரம் வீர் சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர் அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு வைக்கப்பட்டது.

*இந்திய படையில் 'ஐ.என்.எஸ்., வாஹீர்' நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டது.

ஜன.26: மூக்குவழி செலுத்தும் 'இன்கோவாக்ஸ்' கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்.

ஜன.28: தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு தினத்தில், 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியீடு.

*டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள 'மொகல் கார்டன்' பெயர் 'அம்ரித் உத்யான்' என மாற்றம்.

ஜன.29: ஒடிசா சுகாதார துறை அமைச்சர் நாபா கிஷோர் தாசை, போலீஸ் எஸ்.ஐ., கோபால் தாஸ் சுட்டுக் கொன்றார்.

ஜன.30: தென் ஆப்ரிக்காவில் இருந்து சிவிங்கிப்புலிகளை கொண்டு வர இந்தியா பத்தாண்டு ஒப்பந்தம்.

உலகம்

ஜன.1: பிரேசில் அதிபராக லுாயிஸ் சில்வா பதவியேற்பு.

ஜன.2: 'யூரோ' நாணயத்தை ஏற்றது குரோஷியா.

ஜன.3: டொனெட்ஸ்க்கில் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 89 ரஷ்ய வீரர்கள் பலி.

ஜன.9: அமெரிக்காவின் முதல் சீக்கிய பெண் நீதிபதியாக (டெக்சாஸ் சிவில் நீதிமன்றம்) மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்பு.

ஜன.14: 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்திற்கு அமெரிக்காவின் ரபோனி கேப்ரியல் தேர்வு.

ஜன.15: நேபாள விமான விபத்தில் (காத்மாண்டு -- போக்கரா) 72 பேர் பலி.

ஜன.17: அர்மேனியாவுக்கான இந்திய துாதராக நிலாக்சி சஹா சின்ஹா பதவியேற்பு.

*இந்தியா, அமெரிக்காவால் தேடப்படும் பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மானை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பு.

ஜன.18: உக்ரைன் ஹெலி காப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் உட்பட 18 பேர் பலி.

ஜன.19: அர்மேனிய ராணுவ முகாமில் தீ. 15 வீரர்கள் பலி.

ஜன.20: 'சீட்' பெல்ட் அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ரூ. 51 ஆயிரம் அபராதம்.

ஜன.25: நியூசிலாந்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு.

* இந்தியா - எகிப்து இடையே இணைய பாதுகாப்பு, கலாசாரம், ஐ.டி., துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜன.26: நைஜீரியாவின் நசராலா, பெனு மாகாணங்களில் குண்டு வெடித்து 54 பேர் பலி.

ஜன.28: இஸ்ரேலின் ஜெருசலேமில் யூத மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு. 7 பேர் பலி.

ஜன.29: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ் கவிழ்ந்து தீ. 42 பேர் பலி.

நீண்ட யாத்திரை

ஜன.29: கன்னியாகுமரியில் துவங்கிய காங்., எம்.பி.,ராகுலின் 145 நாள் 'ஒற்றுமை யாத்திரை' (பாரத் ஜோடா) காஷ்மீரில் நிறைவு.

பழநியில் கோலாகலம்

ஜன.27: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

புதையும் நகரம்

ஜன.8: உத்தரகண்டின் ஜோஷிமத் நகரம் ஆண்டுக்கு 6.5 செ.மீ., அளவு புதைந்து வருகிறது. நிலச்சரிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டு விரிசலடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

சபாஷ் கேப்டன்

ஜன.3: உலகின் உயரமான சியாச்சின் போர்முனையில் (15,632 அடி), பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி கேப்டன் சிவா சவுகான்.

சட்டசபையில் சலசலப்பு

ஜன.9: தமிழக அரசின் உரையை முழுமையாக படிக்காத கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம். கவர்னர் வெளியேறினார்.

டாப் 5

ஜன.17: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த அபிசித்தருக்கு

கார் பரிசு.

ஜன.19: கர்நாடகாவின் கலபுரகியில் 51,900 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பா.ஜ., அரசு கின்னஸ் சாதனை.

ஜன.13: தமிழக அரசு பணிக்கான போட்டித் தேர்வில் தமிழ்த்தாளில் 40 சதவீத மதிப்பெண் கட்டாயம்.

ஜன.15: செஞ்சியில் 111 பேர், 5 மணி நேரம் பம்பை இசைக்கருவியை இசைத்து நோபல் உலக சாதனை.

ஜன.18: உலகின் வயதான பெண் லுாசில் ராண்டன் 118, (பிரான்ஸ்) காலமானார்.






      Dinamalar
      Follow us