PUBLISHED ON : மே 31, 2020

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த, மார்கரேட், 68, என்ற பெண்ணுக்கு, 1974ல் திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர், நோவா அடெங்குவா, 77. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. நைஜீரியாவில் உள்ள பிரபலமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், எந்த பயனும் இல்லை.
இதையடுத்து, சோதனை குழாய் நடைமுறை மூலம் குழந்தை பெற முயற்சித்தனர். மூன்று முறை முயற்சித்தும், தோல்வி தான் கிடைத்தது. இந்நிலையில், லாகோஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக, சோதனை குழாய் நடைமுறை வாயிலாக, மார்கரேட் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, சமீபத்தில், அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை ஆண்; மற்றொன்று பெண்.
'எனக்கு, 68 வயதானாலும், குழந்தை பெற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்தேன். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். இறுதியில், கடவுள் கண்ணை திறந்து விட்டார். பாட்டி வயதில் இருக்கும் நான், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பதை நினைத்து, மகிழ்ச்சி அடைகிறேன்...' என்கிறார், மார்கரேட்.
ஆப்பிரிக்க நாடுகளில், மிக அதிகமான வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமை, மார்கரேட்டுக்கு கிடைத்துள்ளது.
ஜோல்னாபையன்

