தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணுக்கு மூட்டை!

துணுக்கு மூட்டை!

துணுக்கு மூட்டை!


PUBLISHED ON : ஆக 08, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை சென்டிமென்ட்!

பருத்திவீரனைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் மதுரையில் படமாக்கப்படுவது, மதுரை தமிழில் எடுக்கப்படுவது சென்டிமென்டாகி விட்டது. இந்நிலையில், தற்போது மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் வளர்ந்துள்ள ஒரு படம் தான், 'ஆர்வம்!' ஐந்து ஆண்டுகளுக்கு முன், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு காதலை மையமாக வைத்து படமாக்கியுள்ளனர்.

— சினிமா பொன்னையா.

* * *

இன்டர்நெட் காதல்!

அர்ஜுன் நடித்த, 'வேதம்' படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, படத்தையே தயாரித்த வாசு பாஸ்கர் தற்போது புதுமுகங்களை வைத்து, 'மறுபடியும் - ஒரு காதல்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவில் இருக்கும் பையனுக்கும், அமெரிக்காவில் உள்ள பெண்ணுக்கும் இன்டர்நெட்டில் ஏற்படும் நட்பு, பின் காதலாக மாறுவதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் அனிருத்.

* * *

ஹீரோவாகும் இயக்குனர் வாரிசு!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய், கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் என்று, பல இயக்குனர்களின் வாரிசுகள் ஹீரோவாக நடித்து வருவதைத் தொடர்ந்து, இயக்குனர் வி.சேகரும் தன் மகன் கார்ல் மார்க்சை ஹீரோவாக்குகிறார். தமிழில் ஏற்கனவே இயக்கிய, 'வரவு எட்டணா செலவு பத்தணா' படத்தை, 'என்டி தர்பார்' என்ற பெயரில், கன்னடத்தில் ரீ-மேக் செய்துள்ள வி.சேகர், அடுத்தபடியாக மகன் நடிக்கும் தமிழ் படத்தையும் தானே இயக்குகிறார்.

* * *

டைரக்டர் சாமியின் செக்ஸ் பிரச்னை!

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இவான் துர்கேனியூ என்பவர் எழுதிய வாழ்க்கை அனுபவம் பற்றிய தகவல்களை சேகரித்துதான், 'சிந்து சமவெளி' படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் சாமி. என்றாலும், உயிர், மிருகம் ஆகிய படங்களில் மையமாக வைத்து இயக்கிய செக்ஸ் பிரச்னையை இப்படத்திலும் விடவில்லை. காதலுக்கும், காமத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தில் முக்கிய கதைக்களமாகிறது.

* * *

தஞ்சை வட்டார வழக்கு படங்கள்!

தஞ்சை தமிழில் உருவான, 'களவாணி' படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கந்தா, நெல்லு ஆகிய படங்களும் தஞ்சை தமிழில் உருவாகின்றன. இதில், 'நெல்லு' படக்குழுவினர், தஞ்சை வட்டார தமிழ் சரியாக வரவேண்டும் என்பதற்காக, தஞ்சைவாசிகளை உடன் வைத்து, 'டப்பிங்' பேசி வருகின்றனர்.

* * *

மீண்டும் கானா உலகநாதன்!

'சித்திரம் பேசுதடி' படத்தில் இடம்பெற்ற, 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்ற பாடலை பாடி, பிரபலமான கானா உலகநாதனை அதன் பிறகு காணவில்லை. ஆனால், இப்போது, 'எப்படி மனசுக்குள் வந்தாய்!' படத்தில், 'நாக்கமுக்க' புகழ் சின்னப் பொண்ணுவுடன் இணைந்து, ஒரு பாடலை பாடியுள்ளார். 'இப்பாடல் மீண்டும் என்னை பேச வைக்கும்...' என்கிறார் உலகநாதன்.

— சி.பொ.,

* * *

தமிழ் பயிலும் மும்பை நடிகை!

சமீபத்திய இயக்குனர்கள் பலர், தமிழ் தெரிந்த நடிகைகளையே தங்கள் படங்களுக்கு, 'புக்' பண்ணி வருவதால், தமன்னாவைத் தொடர்ந்து மேலும் பல நடிகைகள் தீவிரமாக தமிழ் பேசத் துவங்கியுள்ளனர். அவர்களில், விஜய்யுடன், 'வேலாயுதம்', தனுஷûடன், 'மாப்பிள்ளை' படங்களில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார். முக்கியமாக தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களை கூட, தமிழிலேயே சொல்லச் சொல்கிறார். பாம்பு தின்கிற ஊரிலே போனால், நடு முறி நமக்கு என்று இருக்க வேண்டும்!

— எலீசா.

* * *

பிசியானார் அஞ்சலி!

'அங்காடித்தெரு'வுக்கு பிறகு கூட, அஞ்சலிக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை. ஆனால், 'மகாராஜா' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்த புகைப்படங்கள் வெளியானதைப் பார்த்து, பல படங்கள் அவருக்கு புக்காகியுள்ளது. தூங்கா நகரம், தம்பி வெட்டோத்தி சுந்தரம், சமுத்திரகனி இயக்கும் படம், 'அங்காடித்தெரு' மகேஷ் நடிக்கும் புதிய படம் என அரை டஜன் படங்கள் அஞ்சலிக்கு கிடைத்துள்ளது. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!'

* * *

வெயிட் போடும் ஓவியா!

'களவாணி' படத்தில் நடித்துள்ள ஓவியாவை நேரில் பார்ப்பவர்கள் த்ரிஷா மாதிரி இருப்பதாக சொல்கின்றனர். ஆனால், இது ஓவியாவுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. 'ஏற்கனவே பீல்டில் இருக்கிற நடிகை போன்று இருந்தால், எனக்கு எப்படி சான்ஸ் கிடைக்கும்!' என்று, 'பீல்' பண்ணுகிறார். மேலும், தன் ஸ்லிம்மான உடலையும் இன்னும் வெயிட் போட்டு, நயன்தாரா மாதிரி மாறப் போவதாக சொல்கிறார். தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்கு தகுந்த வீக்கம்!

— எலீசா.

* * *



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us