PUBLISHED ON : செப் 18, 2016

அ நிறம் | அளவு
தன் அண்ணன் மகனை தோளில் சுமந்தபடி போஸ் கொடுக்கும் கிரிக்கெட் வீரர், இர்பான் பதான், தன் இளமைக் கால வாழ்க்கை குறித்து கூறும் போது, 'மசூதியில் பணியாற்றி வந்த என் தந்தையின் சிறிய வருமானத்தில் சிரமப்பட்டு வாழ்ந்தோம்...' என்றும், 'அன்று கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்காக நாங்கள் தவித்த போது, 500 ரூபாய் கொடுத்து, தவணை முறையில், 'டிவி' வாங்கினார், தந்தை. அந்த, 'டிவி'யில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போதெல்லாம், எங்கள் வீட்டின் ஏழ்மை நிலை தான் நினைவுக்கு வரும். இன்று நிலைமை மாறி, அதே கிரிக்கெட்டால் பொருளாதார ஏற்றம் ஏற்பட்டாலும், பழசை மறக்க முடியவில்லை; இப்போதும் என் மனம், எளிமையாக வாழவே ஆசைப்படுகிறது...' என்று கூறியுள்ளார்.
— ஜோல்னாபையன்.
