தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாலைவன சொர்க்கம்!

பாலைவன சொர்க்கம்!

பாலைவன சொர்க்கம்!


PUBLISHED ON : டிச 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை அதிசயங்கள் கொஞ்சி விளையாடும் இடங்களை பூலோக சொர்க்கம் என கூறுவது உண்டு. ஆனால், பாலைவன சொர்க்கம் பற்றி கேள்விப்பட்டது உண்டா? ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்த பாலைவன சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திரும்பும் பக்கமெல்லாம், பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள், பசுமை கொஞ்சும் புல்வெளி என, கண்ணுக்கு குளிர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது, இந்த சொர்க்கம். உயரமான இடங்களில் தொங்க விடப்பட்டுள்ள, 2,965 கூடை களில், கண்ணை கவரும் மலர்கள் தொங்குகின்றன. இதைப் பார்ப்பதற்கு தொங்கு தோட்டம் போலவே உள்ளது.

மலர்களாலேயே பிரமிடுகள், ஒட்டகம், யானை, ஈபிள் டவர் ஆகியவையும் உருவாக்கப் பட்டுள்ளன. இரவு நேரங்களில் இங்கு பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒளிரும் போது, சொர்க்கமே கீழிறங்கி வந்து விட்டது போல் இருப்பதாக, பார்வையாளர்கள் கூறுகின்றனர். 21 ஆயிரம் சதுர அடியில் இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இது இடம் பெற்றுள்ளது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us