PUBLISHED ON : அக் 10, 2010

நவராத்திரி என்றாலே உடனே வீட்டுக்கு வீடு வைக்கப்படும் கொலுதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். சென்னை கோடம்பாக்கம் பகுதி மக்களுக்கு, பானுமதியம்மாவின் கொலுதான் முதலில் நினைவிற்கு வரும். காரணம்... இவரது பழம் பெருமை பேசும் கொலுதான்.
அது என்ன... பழம் பெருமை என்கிறீர்களா... 90 வருடத்திற்கு முன் புழக்கத் தில் இருந்த செம்புத்தவலை, 85 வருடத்திற்கு முன்னால் இருந்த பித்தளை கூஜா என்று அந்தக்காலத்து பொருட் களை இவர் கொலுவில் அடுக்கி வைத்திருப்பார். பலரும் பார்த்தே இருக் காத மளிகை சாமான்கள் போட்டு வைக்கும் பலசரக்கு பெட்டி, வேலைப் பாடுகளுடன் கூடிய படி, பால் அளக்க பயன்படும் வீசம் செம்பு, கண்ணாடி பாட்டில்கள் என்று ஏõராளமான பொருட்கள் இவரது இருப்பில் உள்ளது. இவை எல்லாம் பழைய பொருட்கள் என்றாலும், ஏதோ நேற்றுதான் வாங்கியது போல மெருகு குலையாமல், புத்தம் புதுசாய் வைத்திருக் கிறார். அந்த அளவிற்கு பழம்பொருட்கள் மீது பாசம், பராமரிப்பதில் நேசம். கிட்டத்தட்ட 40 வருடங்களாக கொலு வைத்து வரும் பானுமதியம்மாவிடம் சுமார் 3 ஆயிரம் பொம்மைகள் உள்ளன. கொலு முடிந்த பிறகு இந்த பொம்மை களை, 'பேக்கிங்' செய்யவே இரண்டு வாரமாகுமாம். தவிர, இவரது கொலுவில் ஒரு கருத்தும் இருக்கும். அந்தக் காலத்தில், 'டிவி' இல்லாததால். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒருவரை ஒருவர் பார்த்து, பேசி, சிரித்துக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக, மகிழ்ச்சியாக இருப்பதாக பொம்மைகளைக் கொண்டே விளக்கியிருப்பார். அடுத்ததாக, 'டிவி' வந்த பிறகு, இன்றைய குடும்பத்தில் யாரும், யாருடனும் பேசாமல், அனைவரும், 'டிவி'யே கதி என்று இருப்பதையும் சுட்டிக்காட்டி யிருப்பார். இந்த தலைமுறை குழந்தைகளுக்கு அந்தக் காலத்தை பற்றி வார்த்தைகளால் சொன்னாலும் விளக்க முடியாத பல விஷயங்களை, பானுமதியம்மாவின் கொலு எளிதாக விளக்கும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஒரே ஒரு சிரமம் என்னவென்றால், நெருக்கடியான சென்னையில் இவரது கொலு வைக்க இடம் கிடைப்பது இல்லை... கொலு வைப்பதில் உள்ள ஆர்வம் காரணமாக பல சிரமங்களை தாங்கிக் கொண்டுதான் இதுவரை கொலு வைத்து வந்துள்ளார். இந்த வருடமும், இடம் தேடி, கொலு வைத்து, நவராத்திரியை சிறப்பிப்பார் என்று நம்புவோம்.
***
