sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!

/

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!


PUBLISHED ON : ஏப் 07, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய, 52 இடங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது, 'நியூயார்க் டைம்ஸ்' என்ற ஆங்கில பத்திரிகை. அதில், தமிழகமும் இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே மாநிலம், தமிழகம் தான்.

உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில், தமிழகம், 24வதாக உள்ளது. இதற்கு காரணம், இங்குள்ள கலாசாரம் மற்றும் மக்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கட்டட அமைப்புகள் தானாம்.

உலக அரங்கில், இந்திய கலாசாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில், தமிழக கலாசாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் நமக்கு பெருமை தரக்கூடியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள், பழமை வாய்ந்ததாகவும், கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மதுரை, மீனாட்சியம்மன் கோவில்; தஞ்சை, பிரகதீஸ்வரர் கோவில்; காரைக்குடி செட்டிநாடு பகுதியில் உள்ள, 18ம் நுாற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என, பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழகத்தை, கட்டாயம் பார்க்க வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளது, அப்பத்திரிகை.

மெட்ரோ நகரங்களில், அழகு வாய்ந்தவை, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நகரம்; கனடாவின் பெரிய நகரமான, டொராண்டோ; பெரிய ஓட்டல்களுக்கு புகழ்பெற்ற, ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய்; உணவுகளில் புதுவகைகளை காட்டும், ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு இடையில் உள்ள துருக்கியின் செஸ்மே; பழமையான நகரமான, சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில், தமிழகமும் இடம்பெற்றுள்ளது.

இதில், உலகின் முன்னணி நாடுகளான, அமெரிக்கா - வாஷிங்டன், ஐரோப்பா - பார்சிலோனா மற்றும் கிரீஸ். ஆசியா - வியட்நாம், ஆஸ்திரேலியா - சிட்னி போன்றவை, தமிழகத்தை விட பின்தங்கி உள்ளன.

இது, நம் கலாசாரத்துக்கு கிடைத்த பெருமை. தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாசாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை, இந்த பட்டியலும் நிரூபித்துள்ளது.

- புஷ்பலதா






      Dinamalar
      Follow us