/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஒரு ஓவியத்தின் விலை 18 ஆயிரம் கோடி!
/
ஒரு ஓவியத்தின் விலை 18 ஆயிரம் கோடி!
PUBLISHED ON : அக் 04, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ, 1955ல் வரைந்த, 'அல்ஜீரியன் பெண்கள்' என்ற ஓவித்தை, யூஜின் டெலாக்வா என்ற பிரஞ்சு நாட்டு ரசிகர் தன் வீட்டில் வைத்து இருந்தார். விலைமாதர்களின் விதவிதமான நிர்வாண உருவங்களைக் கொண்ட இந்த ஓவியம், மூன்று கோடி டாலர் விலைக்கு வாங்கப்பட்டது.
சமீபத்தில், இந்த அபூர்வ ஓவியம், மீண்டும், 'மன்ஹாட்டன் ராக்பெல்லர்' மையத்தில் ஏலம் விடப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள கலாரசிகர்கள் இந்த ஏலத்துக்கு வந்திருந்தனர். சவுதியை சேர்ந்த ஒரு செல்வந்தர், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஓவியத்தை வாங்கினார்.
உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற பெருமையை பெற்றுள்ளது அல்ஜீரியன் பெண்கள் ஓவியம்.
-ஜோல்னாபையன்.